உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை - நினைவில் வைத்திடுங்கள்!

மகிழ்ச்சியைஎப்படிப் பெருக்குவதுஅல்லது கவலையைஎப்படிக் கழிப்பது என்றுகணிதம் நமக்குகற்றுத் தராமல் இருக்கலாம்ஆனால், அதுமிக முக்கியமான ஒன்றைநமக்கு சொல்லித் தருகிறது...ஒவ்வொரு பிரச்னைக்கும்ஒரு முடிவு இருக்கிறதுஎன்பது தான் அது!ஆயிரம் தவறுகள்செய்த பிறகும் கூடநம் மீது நாம்அன்பு செலுத்துகிறோம்நம்மை அளவற்று நேசிக்கிறோம்அவ்வாறிருக்கஒரே ஒரு தவறு செய்ததற்காகமற்றவர்களை நாம்எப்படி வெறுக்க முடியும்நம் வாழ்க்கையின்மிகப்பெரிய பரிசுமன்னிப்பது என்று உணருங்கள்!கல்லால் அடிபட்டுகாயம்பட்ட பின்னும்ஒரு மரம் தரும்சுவையான கனியைப் போலஅந்த மன்னிப்பு என்பதுபெருந்தன்மையோடு இருக்கட்டும்!அதிர்ஷ்டசாலிகளுக்குஅருமையான சந்தர்ப்பங்கள்வாய்க்கின்றனதைரியமானவர்கள்சந்தர்ப்பத்தை உருவாக்குகின்றனர்ஆனால், பிரச்னைகளைசோதனைகளை எல்லாம்யார் சரியான சந்தர்ப்பமாகவாய்ப்பாக மாற்றுகின்றனரோஅவர்களே மிகச்சிறந்தவெற்றியாளர்களாக மாறுகின்றனர்!நம்மைச் சுற்றியிருக்கிறமனிதர்கள் எல்லாருக்குமேமரியாதை கொடுங்கள்சிலர் அதற்குதகுதி உடையவர்களாகஇல்லை என்றாலும்மரியாதை என்பதுஅவர்களுடைய குணத்தைகாட்டுவதல்லநம்முடைய நல்ல குணங்களின்பிரதிபலிப்பு என்பதைநினைவில் வைத்திடுங்கள்! — எஸ்.வி. ராஜசேகரன், மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !