உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை! - தேடல் ஒன்றிலே....

தேவைகள் அற்றுதேக்கி வைக்கப்படுபவைநம் தேடல்களைசிறை வைக்கின்றன!தேவைகளுடன்நிறுத்தி வைக்கப்படுபவைநம் தேடல்களைபுதுப்பிக்கின்றன!மிகப்பெரிய தேடல்கள்நம்மை உச்சி முகட்டில்ஊஞ்சலாட்டி பின்சஞ்சலத்தில்சங்கமிக்க வைக்கிறது!சின்ன சின்ன தேடல்கள்நம்மை சிகரத்திற்குகொண்டு சென்று பின்சிம்மாசனத்தில் அங்கம்சொக்க வைக்கிறது!எதிர்பார்த்த தேடல்கள்நம் தேவைகளைவிசாலமாக்குகிறது!எதார்த்த தேடல்கள்நம் தேவைகளைவிருத்தியாக்குகிறது!அதிவேக தேடல்கள்நம்மை வகை இல்லாதவாழ்க்கையில்வழுக்கி விழச் செய்கிறது!நிதான தேடல்கள்நம்மை தொல்லை இல்லாதவாழ்க்கையைதொடரச் செய்கிறது!தேவைகளை தேடிபெறும் போது தான்தேடல்களின் மகத்துவம்பெருமை அடைகிறது!முதல் பார்வையின்முன்னில் என்பதல்லதேடல்!முற்றுப்புள்ளி இல்லாததொலைதுாரப் பார்வையின்முயற்சி தேடல் ஒன்றிலேநம் கண்ணுக்கு தெரியாதகடவுளையும் காட்சி மேடையில்சாட்சியாக்க முடியும்!— அ. ரேவந்த், கொச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !