உள்ளூர் செய்திகள்

கவிதை - கவிஞன்

* பொய்யெனும் கற்பனைக்குப்பூவைத்து அழகு பார்ப்பவன் கவிஞன்...உண்மைகளைக் கூர் தீட்டிகுறிவைத்து வீசுபவனும் அவன்தான்!* கோடி பணம் கொடுத்தாலும்விஷ விருட்சங்களுக்குவேர்களாக மாட்டான்...அவன் —பாதையோர வேலியில்படரும் பூங்கொடி போல்சுதந்திரம் பழகியவன்!* கவிஞன் —வார்த்தைகளை வசப்படுத்திக் கொண்டுசிந்தனை உளியால்சிற்பம் செதுக்குவான்...தனிமை தவமிருந்துஇனிமை கவிதைகளை ஈன்றெடுப்பான்...சின்னச் சின்ன அழகைக் கூடஅவன் விழிகள் வீணாக்காது!* இன்பம் துன்பம் எனும்இரட்டைச் சிறகணிந்துவிண்ணில் உலாவரும்வீரியப் பறவை அவன்!* சமுதாயக் கேடுகளையும்,பண்பாட்டுப் பழுதுகளையும்அவனது எழுதுகோல்எடுத்துக் காட்டியே தீரும்!* அன்னை மொழியையும்,பிஞ்சு கால் பதிந்த மண்ணையும்அவன் கடைசி வரை காதலிப்பான்!* கவிஞனுக்குவினாக்குறியாய் வளையத் தெரியாது...வியப்புக்குறி போல் நிமிர மட்டுமே தெரியும்!* கவிஞன் என்பவன்விழிகளுக்கு விருந்தாளி;மொழிகளுக்கு முதலாளி!— நா.பெரியசாமி, காட்டுக்குப்பம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !