உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை - சிந்தித்து செயல்படுங்கள்!

யாரெல்லாம் நம்மோடு இருப்பர்விலகுவர் என்று காலம் முடிவு செய்வதில்லைஅவர்களின் வார்த்தையும்நடத்தையும் தான் முடிவு செய்கிறது!வாய் தவறி விழும் பேச்சுக்கள்கை தவறி விழும் கண்ணாடியை விடகூர்மையானது!யாரிடம் பேசுகிறோம் என்பதை விடஎன்ன பேசுகிறோம் என்பதை அறிந்துபேசுங்கள்!தன்னுடைய செயலும் வார்த்தைகளும் மட்டும் தான் சரியென்று வாதாடுபவர்கள் மத்தியில்அமைதியை மட்டும் உங்கள் ஆயுதமாகவைத்துக் கொள்ளுங்கள்!இதுவும் கடந்து போகும்அது பழமொழிஇதுவும் பழகிப்போகும்இது புதுமொழி!ஒவ்வொரு சோகமும், துன்பமும்வாழ்க்கையில் நல்ல பாடத்தைகற்றுத்தரவே வருகிறது!யாரும் உங்கள் கவலைகளைபார்ப்பதில்லையாரும் உங்கள் வலிகளைபார்ப்பதில்லைஆனால், எல்லாரும் உங்கள் தவறைமட்டுமே பார்ப்பர்!மனிதனும், வாழை மரமும் ஒன்று தான்தேவைப்படும் வரை தான் வைத்திருப்பர்தேவை முடிந்தவுடன் வெட்டி வீசி விடுவர்சிந்தித்து செயல்படுவோம்!— டி. ராஜன் கோச்சடை, மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !