உள்ளூர் செய்திகள்

கவிச்சோலை

இதய குளத்தில் காதல் கல்லெறிந்து...* என் பார்வைஅம்பு பட்டுகாயம் பட்டதென்னவோஉன் இதயமாகஇருக்கலாம்...ஆனால், வலிஎனக்குள்ளே!* எட்டாக்கனி நீயென்பதால்உன்னை மறக்கநினைத்து, நினைத்தேதினம் உன்னையேநினைத்து கொண்டிருக்கிறேன்...மறந்து போனேன்உன்னை மறப்பதுஎப்படியென்று!* என் அப்பாவின்நினைவு நாளன்றுகண்ணீர் கூடவர மறுத்து விட்டது...ஏன் தெரியுமா?உப்பு நீர்உன்னை உறுத்துமென்று!* என் காதலைஏற்காமல்காலம் தாழ்த்துவதேனோ?என்னை கவிஞனாக்கிடவா...உனக்கு தெரியுமா?உன்னை முதன்முதல்பார்த்தபோதேநான் ரசிகனாய்,கலைஞனாய், கவிஞனாய்மாறிப்போனேனென்று!* என்னுடல்இளைத்து விட்டதுஎன்கின்றனர்உறவினர்கள்...உன்னால் தானேஇரவு பகலாவும்,பகல் இரவாகவும்என்னுள் வானிலைமாற்றம் நிகழ்ந்தது!அதற்கு ஈடுகொடுக்கமுடியாத உடல்இளைக்காமல்என்ன செய்யும்?* உன் இதயக் குளத்தில்காதல்கல்லெறிந்துவிட்டுநான் கலங்கி கொண்டிருக்கிறேன்...நீயோ,தெளிவாகவே இருக்கிறாய்மரபு வேலிக்குள்!— தே.பழனி, ராட்டினமங்கலம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !