கரப்பான் பூச்சி சாப்பிடும் தண்டனை!
தனியார் நிறுவனங்களில் சரியாக வேலை செய்யாவிட்டால், அபராதம் விதிப்பர் அல்லது பணியிலிருந்து,'சஸ்பெண்ட்' செய்வர். ஆனால், சீனாவின் ஜீனியா நகரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, வித்தியாசமான தண்டனை என்ற பெயரில், குரூரமான தண்டனை அளிக்கப்படுகிறது.மேலாளர்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் வேலை செய்யாதோர், குறிப்பிட்ட நாட்களுக்குள் விற்பனை இலக்கை எட்டாதோருக்கு, கரப்பான் பூச்சியை சாப்பிட வைப்பது, சிறுநீர் குடிக்க வைப்பது, குளியல் அறை தண்ணீரை குடிக்க வைப்பது ஆகிய தண்டனைகள் வழங்கப்படுகின்றன.இந்த தண்டனையை ஏற்காவிட்டால், முதுகில், 'பெல்ட்' அடி வாங்க வேண்டுமாம். இதுபோன்ற நிறுவனங்களிலும், இன்னும் ஊழியர்கள் பணியாற்றத் தான் செய்கின்றனர்.— ஜோல்னாபையன்.