அமுல் பேபி நினைவிருக்கிறதா?
அமுல் என்று சொன்னவுடன், வெண்ணை மட்டுமல்லாமல், அமுல் பேபி பற்றியும் நினைவுக்கு வரும். குஜராத் மாநிலத்தில், 1948ல், 'ஆனந்த் மில்க் யூனியன் லிமிடெட்' நிறுவனம், வெண்ணை உற்பத்தி செய்தபோது, விளம்பரம் செய்ய, மாடலாக ஒரு குழந்தை வேண்டும் என்று அறிவித்தது.அதை பார்த்து, 700க்கும் மேற்பட்ட குழந்தைகளின் புகைப்படங்கள் வந்து குவிந்தன. அவைகளில் இருந்து, 1966ல், ஷோபா என்ற பெண் குழந்தை தேர்வு செய்யபட்டது. அந்த குழந்தை இப்போது, அமெரிக்காவில் ஷோபா தரூர் என்ற பெயரில் எழுத்தாளரும், சமூக ஆர்வலருமாக இருக்கிறார். இவர், திருவனந்தபுரம் காங்., - எம்.பி., சசி தரூரின் மூத்த சகோதரி.சமீபத்தில், கேரளா அரசு சுற்றுலா துறை, 'ராப்சடி ஆப் ரெயின்ஸ் -மான்சூன்' என்ற, 'டாகுமென்ட்டரி' படம் ஒன்றை தயாரித்தது. இதற்கு பின்னணி குரல் கொடுத்தவர், ஷோபா தரூர். அதற்காக அவருக்கு, தேசிய விருது கிடைத்தது. அப்போது தான், அமுல் பேபியாக தான் தேர்வானது பற்றி கூறினார், ஷோபா. ஜோல்னாபையன்