உள்ளூர் செய்திகள்

உயர்கிறது, தற்கொலைகள்!

கடந்த, 2010ல், உலக சுகாதார அமைப்பும், சர்வதேச தற்கொலை தடுப்பு மையமும் இணைந்து சேகரித்த புள்ளி விபரத்தில், தற்கொலை எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது, தெரிய வந்துள்ளது.ஆண்டு ஒன்றுக்கு, தற்கொலை செய்து கொண்டோரின் எண்ணிக்கை, 10 லட்சத்தை விட அதிகமாக இருக்கிறது. 30 லட்சம் பேர், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். 40 விநாடிக்கு ஒருவர், உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். நாள் ஒன்றுக்கு, 3,000 பேர் தற்கொலை செய்கின்றனர். 2020ல் இந்த எண்ணிக்கை, 15 லட்சத்தை கடந்திருக்கிறது.இந்தியா, தேசிய கிரைம் பியூரோ, 2019ல் வெளியிட்ட புள்ளி விபரப்படி, அதிக அளவில் தற்கொலை நடைபெறும் மாவட்டம், கேரள மாநிலம், கொல்லம்.கேரளாவில், ஆண்டுக்கு, 8,556 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.— ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !