உள்ளூர் செய்திகள்

சாதனைப்பெண், ரியா!

மலை மீது சரியான பாதை இல்லாத பகுதிகளிலும் ஜீப் ஓட்டுவதை சவாலாக ஏற்று சாதனை படைத்து வருகிறார், கேரள மாநிலம் கோட்டயம், பாலா என்ற ஊரை சேர்ந்த, 24 வயது ஆங்கில ஆசிரியை, ரியா. இவருக்கு சாதனை படைப்பது என்றால் கொள்ளை ஆசை. 'பெண்கள் வீடுகளில் முடங்கி கிடக்காமல் ஆண்களுக்கு நிகராக செயல்பட்டு முன்னுக்கு வர வேண்டும் என்பது தான் என் லட்சியம்...' என, மற்ற பெண்களுக்கு ஊக்கம் அளிப்பதில் அதிக கவனம் காட்டி வருகிறார், ரியா. - ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !