உள்ளூர் செய்திகள்

உலக கால்பந்தாட்ட போட்டிக்கு தயாராகும் மைதானங்கள்!

அடுத்த உலக கால்பந்து போட்டி, பிரேசிலில் நடைபெற இருக்கிறது. இதற்காக, 12 மைதானங்கள் தேவைப்படுன்றன. ஏற்கனவே, ஐந்து மைதானங்கள் இருக்கின்றன. மேலும், ஏழு மைதானங்களில் வேலை நடைபெற்று வருகிறது. ஆனால், வேலைகள் மந்தமாக நடைபெற்றதால், நீதிமன்றம் தலையிட்டு, வேலைகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளது. உலக கால்பந்து போட்டிக்காக, ஏராளமான பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது, கடந்த முறை, ஆப்ரிக்காவில் நடைபெற்ற போது, செலவான தொகையை விட, மூன்று மடங்கு அதிகம்.— ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !