பீகாரிலும் வந்தாச்சு வாரிசு அரசியல்!
இப்போது எல்லாம் அரசியலுக்கு வருவதே பத்து பரம்பரைக்கு சொத்து சேர்ப்பதற்காக தான். இப்படி சம்பாதிக்கும் சொத்துக்கு, வாரிசு வேண்டாமா... வாரிசுகளும், அள்ளிக் குவிக்க வேண்டாமா... இந்த நோக்கத்துடன், ஏகப்பட்ட அரசியல் வாரிசுகள் களமிறங்கியிருக்கின்றனர். நம்ம, லல்லு பிரசாத்தும், இரண்டு வாரிசுகளை நாட்டு மக்களுக்கு, 'அர்ப்பணித்து' இருக்கிறார்.சமீபத்தில் லாலு, 'பரிவர்த்தன் ராலி' என்று ஒரு மாபெரும் கூட்டத்தை கூட்டி, தன் இரண்டு மகன்களான தேஜ் பிரதாப் மற்றும் தேஜஸ்வி பிரதாப் ஆகியோரை, மக்களுக்கு அறிமுகப்படுத்தி, 'இனி, இவர்களுக்கு ஆதரவு அளித்து, ஜனநாயகத்தை பலப்படுத்த வேண்டும்...' என்கிறார் லல்லு. தேஜ், பட்டப்படிப்பை பாதியில் விட்டு விட்டார். தேஜஸ்வியும், படிப்பு பற்றி கவலைப்படாமல், கிரிக்கெட் மட்டையை தூக்கி கொண்டு, கிரிக்கெட்டை பலப்படுத்தும் முயற்சியில், தீவிரமாக இருக்கிறார்.— ஜோல்னாபையன்