சம்மர் டிப்ஸ்!
* உஷ்ணம் காரணமாக, கோடையில் எவ்வளவு தான் தண்ணீர் குடித்தாலும், தாகம் அடங்காது. அச்சமயத்தில், நுங்கை சாப்பிட்டால், தாகம் உடனே அடங்குவதுடன், உடலுக்கு தேவையான சத்துகளும் கிடைக்கும். எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த சத்துணவு இது. * கோடையில், நம் உடலுக்கு தேவையான நீர் சத்துகளை வாரி வழங்குகிறது. நுங்கில் உள்ள நீரை வீணாக்காமல் சேர்த்து உண்ண, அதன் மருத்துவ குணங்கள், பல மடங்கு பலன் தரும்.* நன்றாக கடைந்தெடுத்த மோரில், அரை மூடி எலுமிச்சை சாறு, வெங்காய சாறு கலந்து, பெருங்காயம் சேர்த்து குடித்தால், கோடை வெப்பத்தில், உடல் சோர்ந்து போகாது; குளிர்ச்சியாக இருக்கும்.* கோஸ், கேரட், பீட்ரூட் ஆவக்காய்!தேவையான பொருட்கள்: கால் கிலோ கோஸ், நான்கு கேரட், ஒரு பீட்ரூட் என, அனைத்தையும் துருவி வைத்துக் கொள்ளவும். சிறு உருண்டை அளவு புளி, மிளகாய் துாள், பெருங்காயம், கடுகு பொடி, உப்பு தேவையான அளவு.செய்முறை: துருவிய காய்கறிகளை வேக வைத்து நன்றாக அரைக்க வேண்டும். எண்ணெயில் கடுகு பொடியை தாளித்து, மிளகாய் துாள், உப்புடன், அரைத்த விழுது சேர்த்து எண்ணெய் பிரிந்து மேலே வரும் வரை வதக்கி இறக்கவும்.