உள்ளூர் செய்திகள்

கிறிஸ்துமஸ் துவங்கிய தினம்!

* கி.பி., 240களில், மார்ச் 28ல், கிறிஸ்து பிறப்பு விழா கொண்டாட்டம் நிகழ்ந்ததாக, அக்கால கிறிஸ்தவ நாட்காட்டி குறிக்கிறது. பின்னர், கி.பி., 336ல், ஐரோப்பிய நாடான, இத்தாலி, ரோம் நகரில், டிசம்பர் 25ல், கிறிஸ்துமஸ் கொண்டாடும் வழக்கம் தோன்றியது. இந்த நாளுக்கு ஒப்புதல் அளித்தவர், போப் முதலாம் ஜூலியஸ்* கிறிஸ்துமஸ் விழாவின்போது இயேசு பிறந்த காட்சியை, குடிலாக அமைக்கும் வழக்கத்தை, 1220ல், அசிசி புனித பிரான்சிஸ் துவங்கினார்* கிறிஸ்துமஸ் தாத்தா பரிசு கொடுக்கும் வழக்கம், 10ம் நுாற்றாண்டில் துவங்கியது. கி.பி., 15ம் நுாற்றாண்டில், கிறிஸ்துமஸ் மரம் வைக்கும் வழக்கம் வந்தது. 19ம் நுாற்றாண்டு தான் தொப்பையும், குல்லாவுடனான, சாண்டா கிளாஸ் தாத்தா வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !