சூப்பர் பைக்குகளின் ராணி!
பைக் ஓட்டுவதில் அசாத்திய துணிச்சல் பெற்று விட்டனர், பெண்கள்; பைக்கில் உலகம் முழுவதும் சுற்றி வரவும் ஆரம்பித்து விட்டனர்.மத்திய கிழக்கு நாடான ஈரானில், பெண்கள் பைக் ஓட்ட அனுமதி இல்லை. மரலுயசார்லு பாட்டரிக் என்ற ஈரான் நாட்டு பெண், எம்.பி.ஏ., மற்றும் டாக்டரேட் படிக்க, மகாராஷ்டிர மாநிலம், புனே வந்தார். படித்து முடித்து, வேலையும் கிடைக்க, இந்தியாவிலேயே தங்கி விட்டார். இன்று, 'பேஷன் டிசைனர்' ஆக உள்ளார்.பல ஆண்டுகளுக்கு முன், புனேயிலிருந்து, மும்பைக்கு, பைக்கிலேயே தனியாக சென்ற இவர், '1200 சிசி ஹார்லி டேவிட்சன் 48' பைக் வாங்கிய முதல் பெண். அடுத்து, 'டு காட்டி டியாவெல்' பைக்கையும் முதன் முதலில் வாங்கினார். பிறகு, பி.எம்.டபிள்யு.எப்.650 ஜி.எஸ்., வாங்கினார். இதை வைத்து, 64 உலக நாடுகளை சுற்றி வந்துள்ளார்.இன்று, உலகம் முழுவதும் பைக்கில் பயணிப்பவர்களுக்கு, 'டூர் கைடு' ஆகவும் உள்ளார்.இவரிடம் பல பைக்குகள் உள்ளதால், 'சூப்பர் பைக்குகளின் ராணி' என, செல்ல பெயரிட்டு அழைக்கின்றனர்.ஜோல்னாபையன்