செல்பி சாதனைக்காக வேலையை துறந்த இளைஞர்!
உலகம் முழுவதும், பெரும்பாலான இளைஞர்கள், 'செல்பி' பைத்தியங்களாக உலா வருகின்றனர். பிணங்களுடன், செல்பி, எடுக்கும் அவலமும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில், ஐதராபாத்தை சேர்ந்த, 24 வயதான பானு பிரகாஷ், செல்பி எடுப்பதற்காகவே, பார்த்து வந்த மருந்தக ஆய்வாளர் வேலையை ராஜினாமா செய்துள்ளார்.தற்போது, அமெரிக்காவைச் சேர்ந்த கால்பந்து வீரர் பேட்ரிக் பீட்டர்சன் தான், ஒரு மணி நேரத்தில், 1,449 செல்பி எடுத்து, உலகிலேயே ஒரு மணி நேரத்தில், அதிக செல்பி எடுத்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக இருக்கிறார். இந்த சாதனையை முறியடிப்பதற்காக, தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார் பானு பிரகாஷ். இந்த பயிற்சிக்கு வேலை தடையாக இருக்கும் என்பதால், அதை ராஜினாமா செய்துள்ளார். இப்படியும் சில பைத்தியங்கள் இருக்கின்றனர்!— ஜோல்னா பையன்.