இதப்படிங்க முதல்ல
அரசியல் பிரவேசம் பற்றி கமல்!விஸ்வரூபம் படத்திற்கு, அரசு தரப்பில் கொடுத்த நெருக்கடி காரணமாக, எதிர்காலத்தில், கமலும் அரசியலுக்கு வரக்கூடும் என்று நினைத்த சில மீடியாக்கள், அவரிடம், அது சம்பந்தமான கேள்விகளை கேட்டு வருகின்றன. அதற்கு கமல், 'சினிமாவில், புதுமைகள் செய்து கொண்டிருக்க வேண்டும் என்பதில் மட்டுமே, என் எண்ணம் உள்ளது. மற்றபடி, ஐந்து ஆண்டிற்கு ஒரு முறை, வாக்களிப்பதோடு என் அரசியல் பணி முடிந்து விட்டதாகவே கருதுகிறேன்...' என்று கூறியுள்ளார். மேலும், 'நடிகர்களில் பலருக்கு ஏற்படுவது போல், அரசியலுக்கு வர வேண்டும். நாட்டை ஆள வேண்டும் என்ற ஆசை, ஒருபோதும் எனக்கு ஏற்பட்டதில்லை...' என்றும், திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.- சினிமா பொன்னையாதமன்னாவை பாராட்டும் சமந்தா!தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழும் சமந்தாவுக்கு, இன்னமும் தன், நடனத்தில் திருப்தியில்லை. 'வேகமாக என்னால் நடனம் ஆட முடியாது. மேலும், நடனத்தில் என்னை விட சிறந்தவர் தமன்னா. அவரது நடனத்தை, பல படங்களில் பார்த்து அசந்து போன நான், அவரது தீவிர ரசிகையாகி விட்டேன்...' என்று, வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அவளுக்கு எவள் ஈடு; அவளுக்கு அவளே ஜோடு!- எலீசாஹீரோயிசத்தை தவிர்க்கும் அமலாபால்!தலைவா படத்தின் தோல்வி, அமலாபாலை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி விட்டது. அதனால், இனி, பெரிய ஹீரோக்களின் படங்கள் மீது நம்பிக்கை வைப்பதைவிட, நல்ல கதைகளை மட்டுமே நம்புவோம் என்ற, முடிவுக்கு வந்திருக்கிறார். அதனால், புதிதாக கதை கூற வரும் இயக்குனர்களிடம், முன் போல், ஹீரோ யார் என்று கேட்காமல், 'கதை பிடித்திருந்தால், ஹீரோ ஒரு பிரச்னையே இல்லை. இரண்டாம் தட்டு நடிகர் என்றாலும், ஜோடி சேர தயார்...' என்று கூறி வருகிறார். அனுபவம், புத்தி கொள்முதல்!-எலீசாஹன்சிகாவுக்கு பதிலாக லட்சுமி மேனன்!பாண்டியநாடு படத்தையடுத்து, திரு இயக்கத்தில், நான் சிகப்பு மனிதன் படத்துக்கு, ஹன்சிகாவை தான் ஹீரோயினாக, 'புக்' செய்யும் யோசனையில் இருந்தார் விஷால். ஆனால், பாண்டியநாடு படத்தில், லட்சுமி மேனனுடன், அவர் நடித்த காட்சிகள் இயல்பாக இருந்ததால், 'மீண்டும், அவரையே ஜோடி சேருங்கள்...' என்று, நலம் விரும்பிகள், 'அட்வைஸ்' செய்தனர். அதனால், புதிய படத்திற்கும், லட்சுமி மேனனையே ஒப்பந்தம் செய்துள்ள விஷால், அவரது சம்பளத்தையும் சில லகரங்கள் உயர்த்தியுள்ளார்.- சி.பொ.,காஜலை சாடிய ஸ்ரேயா!காஜல் அகர்வால் அளித்த பேட்டி ஒன்றில், 'ஸ்ரேயா போன்ற நடிகைகள் நடிப்பிலிருந்து ஓய்வு பெறலாம்...' என்று கருத்து கூறியிருந்தார். இதனால், ஆவேசமாகி விட்ட ஸ்ரேயா. 'காஜலை விட, நான் சீனியர் தான் என்றாலும், எனக்கொன்றும் அதிக வயதாகி விடவில்லை. அதுமட்டுமின்றி, 31 வயதாகியும் திருமணம் பற்றி யோசிக்காமல், பணம் சம்பாதிக்கும் நோக்கத்திலே இருக்கும் காஜல், என்னைப்பற்றி கருத்து கூறும் அளவுக்கு, பெரிய நடிகையும் இல்லை; அனுபவசாலியும் இல்லை...' என்று, கோபத்தில் வார்த்தைகளை கொட்டியுள்ளார். வந்தது சண்டையை இறக்கடி கூடையை!- எலீசாகாமெடியன்களை சாடும் வடிவேலு!மீண்டும், என்ட்ரி கொடுத்துள்ள வைகைப் புயல் வடிவேலு, சந்தானம், சூரி உள்ளிட்ட, தற்போதைய காமெடியன்களை நிறையவே சாடு கிறார். 'இப்போதைய படங்களின் காமெடியை பார்த்தால், துளியும் சிரிப்பு வரவில்லை. நகைச்சுவை என்ற பெயரில், தப்பான விஷயங்களை செய்கின்றனர். கூடவே, ஆபாசத்தையும் கலந்து விடுகின்றனர்...' என்று கூறும் வடிவேலு, 'இந்த மாதிரி காமெடியால், மனதுக்கு ரிலாக்சேஷன் கிடைக்காது. மன அழுத்தம் தான் வரும்...' என்றும் கூறியுள்ளார். வடிவேலுவின் இந்த நெத்தியடி விமர்சனத்தை கேட்டு, ஆடிப்போய் இருக்கின்றனர் இள வட்ட காமெடியன்கள்.- சி.பொ.,அவ்ளோதான்!