உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல

சச்சின் வேடத்தில் அமீர்கான்!சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி களிலிருந்து, ஓய்வு பெற்றுள்ள சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கையை மையப்படுத்தி, பாலிவுட்டில் ஒரு படம் தயாராகிறது. இந்தியாவிலுள்ள பல மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்தில் நடிப்பதற்கு, சில இளவட்ட ஹீரோக்கள் படையெடுத்துள்ள நிலையில், இப்போது, அமீர்கானும், சச்சின் வேடத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். 'சச்சினின் தீவிர ரசிகனான நானே, அவர் வேடத்தில் நடிக்க பொருத்தமானவன்...' என்றும் கூறியுள்ளார். இதனால், அமீர்கானே, சச்சினாக நடிப்பார் என்று, பாலிவுட்டில் பரபரப்பாக செய்தி பரவி வருகிறது. - சினிமா பொன்னையாடயலாக்கை மனப்பாடம் செய்யும் விசாகா சிங்!கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த விசாகா சிங்கிற்கு, தென்னிந்திய படங்களில் நடிக்கத் தான் அதிக ஆர்வம். அதனால், தாய்மொழியான இந்தி படங்களை கூட குறைத்து, சென்னை, ஐதராபாத் என்று முகாமிட்டு நடித்து வரும் அவருக்கு, தமிழ், தெலுங்கு என, எந்த மொழியும் தெரியாது. அதனால், தான் நடிக்கும் படங்களின், 'டயலாக்' பேப்பரை இந்தியில் எழுதி வைத்து, பரீட்சைக்கு படிப்பது போல் மனப்பாடம் செய்கிறார். வந்த கூத்து ஆடித் தானே தீர வேண்டும்!- எலீசாஓவியாவுக்கு அலர்ஜி!ஜில்லென்று ஒரு சந்திப்பு படத்தில், இரண்டு ஹீரோயினி சப்ஜெக்ட்டில் நடித்தபோது, ஓவியாவை, 'டம்மி' செய்து விட்டனர். இதனால், இப்போது, யாராவது டபுள் ஹீரோயினி சப்ஜெக்ட் என்று கதை கூற வந்தாலே, அலறி ஓடும் ஓவியா, மதயானைக் கூட்டம் படத்தையடுத்து, கிருஷ்ணாவுடன் நடிக்கும், இருக்கு ஆனா இல்ல படத்தில், இரண்டு ஹீரோயினி சப்ஜெக்ட் என்ற போதும், தனக்கே முதன்மை நாயகி வேடம் என்று உறுதியளித்த பின்னரே, ஒத்துக் கொண்டார். இருப்பினும், 'படப்பிடிப்பு நடக்கும் போது, கதையில் திருத்தம் என்று கூறி, தன் கேரக்டரில் கத்திரி வைத்தால், 'படத்திலிருந்தே வெளியேறி விடுவேன்...' என்று மிரட்டல் விடுத்துள்ளார். சூடு கண்ட பூனை அடுப்படியில் செல்லாது!- எலீசாஜெயம் ரவியின் நீண்ட கால கனவு!நயன்தாராவை கட்டிப்பிடித்து, டூயட் பாடவேண்டும் என்ற, ஜெயம் ரவியின் நீண்ட கால கனவு, தற்போது அவரது அண்ணன் ஜெயம்ராஜா இயக்கும் படத்தில், நனவாகப் போகிறது. அதனால், இப்போதே, நயன்தாராவுடன் கட்டிப்புடி கனவில் நீந்தியபடி, ஜிம்மில் முகாமிட்டு, பூலோகம் படத்துக்காக ஏற்றிய உடம்பை, இப்போது கரைத்துக் கொண்டிருக்கிறார் ஜெயம் ரவி.எல்லைத்தாண்டும் ஆண்ட்ரியாவிஸ்வரூபம் - 2க்கு பின், செகண்ட் ஹீரோயினி வேடம் என்றாலும், முன்னணி ஹீரோக்களுடன் மட்டுமே நடிப்பேன் என்று, முடிவெடுத்துள்ளார் ஆண்ட்ரியா. அதையடுத்து, என்றென்றும் புன்னகை படத்தில், ஜீவாவுடன் நடித்தவர், இப்போது, சிம்புவுடன், இங்க என்ன சொல்லுது படத்தில், நடித்திருப்பதைத் தொடர்ந்து, மேலும், சில முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு, கல்லெறிந்து வரும் ஆண்ட்ரியா, கவர்ச்சியில் எல்லை தாண்டவும் திட்டமிட்டுள்ளார். அதனால், கமர்ஷியல் இயக்குனர்களின் பார்வை, திடீரென்று, ஆண்ட்ரியா பக்கம் திரும்பியுள்ளது. அடுத்து அடுத்துச் சொன்னால், தொடுத்த காரியம் முடியும்!- எலீசாநயன்தாராவை அழைக்கும் ஆந்திர வாலாக்கள்!தமிழில், ராஜாராணி மற்றும் ஆரம்பம் படங்களில் நடித்துள்ள நயன்தாரா, அனாமிகா படம் மூலம், தெலுங்கில் மீண்டும் பிரவேசித்துள்ளார். அப்படத்தில், அவரது இளமையும், நடிப்பும் பேசப்பட்டு வருவதைத் தொடர்ந்து, லட்சுமி மற்றும் துளசி ஆகிய படங்களையடுத்து, மீண்டும், தன்னுடன் ஜோடி சேர, நயனுக்கு அழைப்பு விடுத்துள்ளார் வெங்கடேஷ். இப்படி முன்னணி ஹீரோக்களே, தன்னுடன் மீண்டும் நடிக்க விருப்பம் தெரிவித்து வருவதால், ஆந்திராவில், மறுபடியும், கோலோச்சும் நோக்கில், அங்கு முகாமிடத் துவங்கியுள்ளார். அதிர்ஷ்டம் ஆறாய் பெருகுகிறது!- எலீசா ஏ.வி.எம்.மின் குறும்படங்கள்!விரல்விட்டு எண்ணக்கூடிய சில சினிமா தயாரிப்பு நிறுவனங்களில், ஏ.வி.எம்., குறிப்பிடத்தக்கது. ஆனால், முதல் இடம், என்ற படத்திற்கு பின், எந்த படத்தையும் தயாரிக்காத அந்நிறுவனம், சமீப காலமாக, 'டிவி' தொடர்கள் தயாரிப்பதோடு, குறும்பட தயாரிப்பிலும் இறங்கியுள்ளது. சிவாஜியின் பேரன், சிவாஜி தேவ் நடிப்பில், 'இதுவும் கடந்து போகும்' என்ற பெயரில், ஏ.வி.எம்., தயாரித்துள்ள, 50 நிமிட குறும்படம், விரைவில், வெளியாக உள்ளது.- சினிமா பொன்னையா அவளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !