உள்ளூர் செய்திகள்

டிப்ஸ்!

கேசரி தயாரிக்கும்போது, இரண்டு பேரீச்சம் பழத்தை பொடியாக நறுக்கி போட்டால், சுவை சற்று கூடுதலாக இருக்கும்.* பஜ்ஜி மாவுடன், புதினா அல்லது அரைக்கீரையை பொடியாக நறுக்கி கலந்து, சுட்டு பாருங்கள்; சுவையாக இருக்கும்* தேன் குழல், சீடை செய்வதற்கான மாவில் வெந்நீர் ஊற்றி பிசைந்து செய்தால், எத்தனை நாட்களானாலும் நமத்து போகாது* மைசூர் பாகு செய்யும்போது, ஒரு பங்கு கடலை மாவுடன், இரண்டு பங்கு பயத்த மாவு கலந்து செய்யலாம். சுவையாக இருப்பதுடன், வாயில் போட்டவுடன் கரைந்து விடும்* உருளைக்கிழங்கு பொரியல் செய்யும்போது, கொஞ்சம் பயத்தம் மாவை தெளித்து இறக்குங்கள். பொரியல் மொறு மொறுப்பாக இருக்கும்* தினமும் சாம்பிராணி புகை போடுவது நல்லது. ஒட்டடை பிடிக்காது. கொசுக்கள், நச்சு பூச்சி, புழுக்களும் வீட்டை விட்டு வெளியேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !