டூர் டிப்ஸ்!
டூருக்கு கிளம்பு முன், கம்ப்யூட்டர், பேன், 'டிவி' மற்றும் சமையலறை மின்சாதன பொருட்கள் போன்றவற்றை, 'பிளக்' பாயின்டிலிருந்து கழற்றி விடவும். மின் சாதனங்களில் தொடர்ந்து தூசி படிந்தால், அதில் போடப்பட்டிருக்கும் ஆயிலில் தூசிகள் சேர்ந்து, உலர்ந்து கட்டியாகி விடும். இதனால். உள்ளேயிருக்கும் இயந்திரம் பழுதாக வாய்ப்புள்ளது.சுற்றுலா செல்லும் போது, செலவை பார்க்காமல், வீட்டு வாசலில் கண்காணிப்பு கேமரா ஒன்றை பொருத்தி, மொபைல் போன் மூலம் பார்க்கும் வசதியை, 'டவுன் லோடு' செய்து கொள்ளுங்கள். திருட்டு பயம் இல்லாமல் இருக்கலாம்.போக்குவரத்து வசதி அதிகம் இல்லாத ஊர்களில் உள்ள கோவில்களுக்கு செல்ல நேர்ந்தால், பேருந்து திரும்பி வரும் நேரத்தை முன்னதாகவே கேட்டு வைத்துக் கொண்டால், அதற்கேற்ப சுவாமி தரிசனத்தை முடித்து, சவுகரியமாக திரும்பலாம்.மலைப் பகுதிகளுக்கு சுற்றுலா செல்லும் போது, காது அடைப்பது மற்றும் குத்துவலி போன்ற உணர்வுகள் ஏற்படும். இதை தவிர்க்க, மலையேறும் சமயத்தில், வாயில் ஒரு சாக்லெட்டைப் போட்டு சுவைத்தால், அது போன்ற உணர்வு ஏற்படாது.'ஏசி'யில், மின் இணைப்பை நீக்கி, அதில் உள்ள விண்டோவை மூடி, அதன் மேலே துணி போட்டு மூடவும்.