மரம் ஏறும் நாய்!
பல ஆயிரம் கொடுத்து வெளிநாட்டு உயர் ரக நாய்களை வாங்கி, சிலர் வளர்ப்பதுண்டு. ஆனால், இவைகளை விட படு புத்திசாலி நாய்கள், நம் ஊரிலேயே உள்ளன. கேரள மாநிலம், காசர்கோடு கல்லர் ஆதிவாசி குடியிருப்பில் வாழ்ந்து வருகிறார், பிரசாத். இவர், நாய்களை நேசிப்பவர். தெருக்களில் திரியும் நாய்களை எடுத்து வந்து வளர்த்து வருகிறார். தற்சமயம், இவரிடம், 30 நாய்கள் உள்ளன. அதில், சோபா என்ற நாய், படு கில்லாடி. சொன்ன பேச்சை கேட்டு இவருக்கு உதவியாக இருந்து வருகிறது. பிரசாத் மரத்தில் ஏறினால், சோபாவும் அவரை போலவே மரம் ஏறும். இவர் குடியிருப்பு பக்கத்தில் பெரிய நதி ஓடுகிறது. நதியில் அடிக்கடி தேங்காய்கள் மிதந்து வருவதுண்டு. அதை கண்டதும், தண்ணீரில் குதித்து தேங்காய் கவ்வி எடுத்து வந்துவிடும். —ஜோல்னாபையன்