உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்பு சகோதரிக்கு - எனக்கு வயது, 40. கணவர் வயது, 45. இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். நாங்கள் இருவருமே நல்ல வேலையில் உள்ளோம். வசதிக்கு எந்த குறையும் இல்லை. ஆனால், வெளியில் சொல்ல முடியாத வெட்கக்கேடான ஒரு பழக்கம் என் கணவரிடம் உண்டு. அவர் நல்லவர் தான். ஆனால், திருமணமான, குடும்பப்பாங்கான பெண்களை சந்திக்க நேர்ந்தால், சபலப்படுவார். இப்படி, திருமணமான, தன்னை விட வயது அதிகமுள்ள பெண்களின் மீது, மோகம் ஏற்படுவது, அவரது 20வது வயதிலிருந்தே இருக்கிறதாம். அதுமட்டுமல்லாமல், கைக்கு எட்டும் தொலைவில், நான் உட்பட அவருக்கு சுலபமாக கிடைக்கும் பெண்களிடம் அவருக்கு ஈர்ப்பு வருவதில்லையாம். தன்னை கண்டுக்கொள்ளாத, விலகி போகிறவர்களை வலை வீசி, வேட்டையாடுவதில் தான் விருப்பம் என்பார். இதுபோல், ஏழெட்டு பெண்களை அனுபவித்திருப்பதாகவும், கூறினார். இவரது இந்த குணத்தால், எங்கள் எதிர் வீட்டில் வசிக்கும், 35 வயது பெண் ஒருவள் பாதிக்கப்பட்டாள். அவளது கணவர் மிகவும் சாது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதை சாதகமாக பயன்படுத்தி, அவள் விலக, விலக, இவர், எப்படியோ அப்பெண்ணை மடக்கி விட்டார். ஒருநாள், அந்த பெண், அழுது கொண்டே என்னிடம் வந்து, 'நான் இப்போது, நான்கு மாதம் கர்ப்பமாக இருக்கிறேன்... அதற்கு காரணம் உங்கள் கணவர் தான்...' என்று கூறினாள். 'எப்படி இவ்வளவு உறுதியாக கூறுகிறாய்...' என்று கேட்டால், 'என் கணவர், ஏற்கனவே, குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்...' என்கிறாள். நான், அதிர்ச்சியில் உறைந்து போனேன். என் கணவரிடம் கேட்டேன், முதலில் மறுத்தவர், பிறகு ஒப்புக்கொண்டார். கருவை கலைத்து விடும்படி அவளிடம் கூறியுள்ளார், என் கணவர். ஆனால், நான்கு மாதம் முடிந்த நிலையில் ஏதும் செய்ய முடியாது என்று கூறியுள்ளார், டாக்டர். அதனால், முறைகேடாக கருச்சிதைவு செய்ய போய், இப்போது அப்பெண் இடுப்புக்கு கீழ் செயலிழந்த நிலையில் படுத்த படுக்கையாக இருக்கிறாள். அவள் கணவருக்கு விஷயம் தெரிந்தாலும், என் கணவர் தான் காரணம் என்று தெரியாது. தன் சக்திக்கு மீறி, மனைவியை காப்பாற்ற முயற்சி செய்து வருகிறார். இதனால், நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானேன். இரு பெண் குழந்தைகளை எப்படி வளர்த்து, ஆளாக்குவது என்று கவலையாக உள்ளது. அப்பெண்ணின் சாபம், எங்கள் குலத்தையே அழித்து விடுமோ என்றும் பயமாக இருக்கிறது. ஒருநாள், என் கணவரை அடித்து துவைத்து விட்டேன். 'நான் என்ன செய்யட்டும். 20 வயதில் ஆரம்பித்த பழக்கம் இது. என்னால் விட முடியவில்லை. என்னை கொன்று விடு அல்லது நான் தற்கொலை செய்து கொள்கிறேன்...' என்று அழுகிறார். மனநல மருத்துவரிடம் போகலாம் என்றாலும் வர மறுக்கிறார். நான் என்ன செய்யட்டும் சகோதரி. - இப்படிக்கு, உங்கள் சகோதரி. அன்பு சகோதரிக்கு - ஆண்களில், இரண்டு வகை உண்டு. ஒன்று, வாய்ப்பு கிடைக்காமல் அல்லது வாய்ப்பை ஏற்படுத்தாமல் உத்தமராக இருக்கும் பதிவிரதன்கள். இரண்டு, வாய்ப்பு கிடைத்து அல்லது வாய்ப்பை ஏற்படுத்தி பெண்களை வேட்டையாடும் காமுகர்கள். உன் கணவர், இரண்டாவது வகை. வயதுக்கு மூத்த பெண்களின் மீது தாம்பத்ய மையல் கொள்வதை, 'ஈடிபஸ் காம்ப்ளக்ஸ்' எனவும் கூறுவர். உன் கணவரின் துர்நடத்தைக்கு நீயே பிரதான காரணம். ஒரு ஸ்திரீலோலனை நல்லவர் என, சான்றளிக்கிறாய். தவறு செய்யும் எண்ணம் உன் கணவருக்கு வந்தாலே, மகிஷாசுரமர்த்தினி முகம் காட்டு. உன் கணவர் சர்வமும் ஒடுங்கிப் போவார். ஒருவனுக்கு ஒருத்தி என்பது தான் இறைவனின் ஏற்பாடு. ஆண் குழந்தைகள் ஆயிரம் பிறந்தால், பெண் குழந்தைகளும் ஆயிரம் தான் பிறக்கும். உன் கணவரின் நொண்டி சமாதானங்களை ஏற்காதே. இன்று உன் கணவரை மேய்ச்சலுக்கு அனுமதித்தால், உன் மகள்களின் கதை அதோகதியாகிவிடும். உன் கணவரின் திருவிளையாடல்களுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வை. இனி, எந்த பெண்ணையும் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ய மாட்டேன் என, குலதெய்வத்தின் முன் உன் கணவரிடம் சத்தியம் வாங்கு. உன் கணவரால் பாதிக்கப்பட்டு இடுப்புக்கும் கீழ் செயலிழந்து நிற்கும் பெண்ணுக்கு தேவையான பணத்தை நஷ்டஈடாக கொடு. அந்த பெண்ணின் கணவருக்கு இது வெறும் மனிதாபிமான உதவியாக தெரியட்டும். அந்தப் பெண்ணின் மருத்துவ செலவை நீயே ஏற்றுக்கொள். 'பிஸியோதெரபிஸ்ட்' வைத்து உறுப்பு செயலிழப்பை சரி செய். நல்ல ஆண் மனநல மருத்துவரிடம் வலுக்கட்டாயமாக அழைத்துப் போய், உன் கணவருக்கு 'தெரபி' ஏற்பாடு செய். நிலைமை சீரடையும். - -என்றென்றும் தாய்மையுடன் சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Prasanna Krishnan R
டிச 06, 2025 10:21

அந்தப் பெண் வெறியனைக் கொல்லுங்கள்.


Vijay M
டிச 03, 2025 17:28

பேசாத


krishna
டிச 03, 2025 17:16

மயக்க மருந்து கொடுத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்று ஆண்மைத் தன்மையை நீக்கி விடலாம்


vidhu
டிச 03, 2025 15:27

இப்படியே போனால் இவன் பெத்த பெண்களிடமே கூட தன் கைவரிசையை காட்டுவான். இவன் கேட்டமாதிரி இவனை கொன்று போட்டுடலாம்


Vijay M
டிச 03, 2025 17:30

வாயை மூடு


HoustonRaja
டிச 03, 2025 01:24

எழுத்து முரண்களால் உண்மையான கடிதம் போல தோன்றவில்லை. இருந்தாலும், இது போன்ற ஆண்களை சரிக்கட்ட ஒரு வழி இருக்கிறது. குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய சொல்லவும். செய்தபின் அல்லது செய்யமறுத்தாலோ விவாகரத்து செய்துவிடவும். விவகாரத்தின் போது, அவனின் எல்லா வண்டவாளத்தையும் தண்டவாளத்தில் ஏற்றி, அவன் சொத்து மொத்தத்தையும் சட்டத்தின் மூலமாக பறித்து அவனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தரவும்.


Madras Madra
டிச 02, 2025 14:07

அந்த பெண்ணின் கணவருக்கு தெரியாமல் மறைப்பது நீங்கள் எல்லோரும் செய்யும் பாவம்


தலைவன்
டிச 04, 2025 14:30

அந்த அப்பாவி நீயே இருக்க போகிறாய். விசாரி.


Rathna
டிச 02, 2025 10:54

மிக பெரிய பாவம். இந்த மாதிரி பாவம் சும்மா விடாது. பல ஜென்மங்களுக்கு துரத்தும்.


தலைவன்
டிச 04, 2025 14:32

பாவம் புண்ணியம் பற்றியெல்லாம் பாவிகள் பாடமெடுப்பதுதான் கலிகாலம் போல??


Lakshmanan KR
டிச 02, 2025 09:49

உண்மை


Rajesh Krishna
டிச 02, 2025 07:19

அவன் நல்லவன் இல்லை நல்லா நடிக்கிறார் இல்லை இந்த அம்மா முட்டாளா இருக்கும் மொத்தத்தில் அவன் கெட்டவன் மட்டும் முழு உண்மை யாருக்கும் உண்மையா இல்லை நடிக்கிறான் இந்த அம்மா அவன் தப்புக்கு சப்போட் பன்னஉதஉ


Abinesh Sornappan
டிச 01, 2025 17:13

இவனைப் போல பிரச்னை அவனுடைய மனைவிக்கு இருந்தால் ஒதுக்க கொள்வானா விலங்கு குணமிருந்தால் ஹெல்மெட் அணிந்து சென்றிருக்க வேண்டியது தானே