ஆம்புலன்ஸ் ஓட்டும் பெண்!
படத்தில் இருப்பவர் பெயர், தீபா ஜோசப். கேரளா மாநிலம், கோழிக்கோடு விலங்காடு கிராமத்தை சேர்ந்த, தீபாவுக்கு சிறுவயதில் இருந்தே வாகனம் ஓட்ட வேண்டும் என்ற ஆசை. ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து, எர்ணாகுளத்தில் ஹோட்டல் ஒன்றில் ரெஸ்டாரென்ட் மானேஜர் ஆக வேலை செய்தார். அப்போது, வாகனம் ஓட்டி பழகி, கனரக வாகன ஓட்டுநர் உரிமமும் பெற்றார். சில காலம், கல்லுாரி பஸ் ஓட்டுநராக பணியாற்றினார். பெண்கள் யாரும் ஆம்புலன்ஸ் வண்டியை ஓட்டுவது இல்லை. அதை ஏன் தான் ஓட்டக் கூடாது என்ற கேள்வி, தீபாவுக்குள் எழுந்தது. அதைத் தொடர்ந்து, ஆம்புலன்ஸ் இயக்க துவங்கினார். 'கொரோனா' காலத்தில் ஆண் ஓட்டுனர்களுடன் இவர் துணிந்து ஆம்புலன்ஸ் ஓட்டியுள்ளார். — ஜோல்னாபையன்