வற்றாத முத்தி கிணறு!
பல நுாற்றாண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட இந்த கிணறு, 'முத்தியின் கிணறு' என, அழைக்கப்படுகிறது. 1275ல், கேரள மாநிலம், இடுக்கி, தொடுபுழாவில் வாழ்ந்த வசதியான பெண்ணின் பெயர், முத்தி. இவருக்கு சொந்தமான நிலத்தில், சர்ச் ஒன்றை கட்டியுள்ளார்.தண்ணீர் வசதிக்காக இந்த கிணறு வெட்டப்பட்டது. பல்லாண்டுகளை தாண்டியும், இன்று வரை இந்த கிணற்றை நன்றாக பராமரித்து வருகின்றனர். அன்று முதல், இன்று வரை, கிணற்றில் நீர் வற்றாதது, இதன் சிறப்பு அம்சம்.இந்த கிணற்று நீரை குடித்தால் துயரங்கள் விலகி விடும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, சர்ச்சுக்கு வரும் பக்தர்கள் கிணற்று நீரை குடிக்காமல் செல்வது இல்லை.— ஜோல்னாபையன்