உள்ளூர் செய்திகள்

பொங்கலின் போது, பசுவை வணங்க காரணம்!

காலமெல்லாம் உழைக்கும் மாடுகளுக்கு மரியாதை செலுத்தும் பண்டிகை, மாட்டுப் பொங்கல். பசுவை கோமாதா, காமதேனு என்று, பல பெயர்களில் அழைத்து, தெய்வமாக வணங்குவது தமிழர் மரபு. பசு, விஷத்தை உண்டாலும், அதன் பாலில் துளியும் விஷம் கலந்திருப்பதில்லை. ஆக்ஸிஜனை சுவாசித்து, ஆக்ஸிஜனை வெளிவிடும் உயிரினம், பசு.நம் உடலிலுள்ள விஷத்தன்மையை, பசும்பால் முறிக்கிறது. வயிற்று உபாதைகளுக்கு பசுவின் கோமியமும், சாணமும் கலந்த மாத்திரைகள் உதவுகின்றன. செயற்கையான கிருமிநாசினிகளை விட, மிகச்சிறந்த இயற்கை கிருமிநாசினி, மாட்டுச் சாணம்!சாதமும், பசுவின் நெய்யும் ஒன்று சேர்ந்தால், புரோபிலீன் ஆக்சைடு, எத்திலீன் ஆக்சைடு என்ற, இரண்டு முக்கியமான வாயுக்கள் உருவாகும். இந்த வாயுக்கள், மழை பொழிய உதவுகின்றன. அதனால் தான், ஹோமங்களில் நெய்யும், அன்னமும் கலந்து போடுகின்றனர். மேலும், 10 கிராம் நெய்யை அக்னியில் ஊற்றினால், ஒரு டன் ஆக்ஸிஜன் நமக்குக் கிடைக்கும். இப்போது புரிகிறதா, நம் முன்னோர், பசுவை தெய்வமாக போற்றியதன் காரணம்?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !