உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

மீண்டும் லோகேஷூக்கு அழைப்பு விடுத்த, கமல்!நீண்ட இடைவேளைக்கு பிறகு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்த, விக்ரம் படம் தான் கமலுக்கு, 'மெகா ஹிட்'டாக அமைந்தது. 70 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டு, 450 கோடி ரூபாய் வசூலித்தது.அதன்பிறகு, கமல் நடித்த, இந்தியன் - 2 படம், தோல்வி அடைந்து விட்ட நிலையில், தற்போது மீண்டும், தனக்காக ஒரு கதை தயார் செய்யுமாறு, லோகேஷ் கனகராஜிடம் கூறியுள்ளார், கமலஹாசன். அந்த படத்திலும், விக்ரம் படத்தில், விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் போன்ற இளவட்ட நடிகர்களை நடிக்க வைத்தது போன்று, இரண்டு இளவட்ட நடிகர்களை தன்னுடன் கூட்டணி சேர்த்துக் கொள்ள திட்டமிட்டுள்ளார்.—  சினிமா பொன்னையாபிறந்த மேனியாய் பிறந்தநாள் கொண்டாடிய எமி ஜாக்சன்!மதராசபட்டினம், தெறி உள்பட பல படங்களில் நடித்த, லண்டன் நடிகை எமி ஜாக்சன், சமீபத்தில் தன், 33வது பிறந்த நாளை கொண்டாடினார். ஆனால், படுக்கையில் இருந்து, நிர்வாண கோலத்தில் எழுந்த அவர், எந்தவித ஆடைகளும் அணியாமல் அப்படியே, 'கேக்' வெட்டியுள்ளார். அப்போது, அவரது, நான்கு வயது மகனும் உடன் இருந்துள்ளான்.இது குறித்த புகைப்படங்களை, எமி ஜாக்சன், 'இன்ஸ்டாகிராமில்' வெளியிட்டதை அடுத்து, 'நான்கு வயது மகன் முன்னிலையில், இப்படியா பிறந்தநாள் கொண்டாடுவது?' என, அவரை பலரும் கடுமையான வார்த்தைகளால் வறுத்து எடுத்து வருகின்றனர்.— எலீசாகாமெடி பக்கம் திரும்பிய, விஷால்!விஷாலை பொறுத்தவரை, 'ஆக்ஷன் ஹீரோ' ஆக, தன்னை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ரொம்பவே, 'ரிஸ்க்' எடுத்தார். ஆனால், அப்படி நடித்த படங்கள், அவருக்கு தொடர் தோல்விகளை கொடுத்து விட்டது.இந்நேரத்தில் தான், சுந்தர்.சி இயக்கத்தில் நடித்த, மதகஜராஜா என்ற காமெடி படம், விஷாலுக்கு ஒரு, 'கம் பேக்' படமாக அமைந்தது. இதன் காரணமாக மீண்டும், சுந்தர்.சி இயக்கத்தில் முழு நீள காமெடி வேடத்தில் நடிக்க தயாராகி விட்டார், விஷால். இந்த படத்தில் காமெடியனாக நடிப்பதற்கு, சந்தானம் மற்றும் வடிவேலு ஆகியோரிடத்தில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.— சினிமா பொன்னையாகறுப்புப்பூனை!தங்கலான் நடிகைக்கு கோலிவுட்டில் எதிர்பார்த்தபடி வரவேற்பு இல்லாததால், இங்கு நடிகையரின் திறமைக்கு மதிப்பு இல்லை எனச் சொல்லிக் கொண்டு, தற்போது டோலிவுட்டில் கூடுதல் கவனம் செலுத்துகிறார், அம்மணி.அது மட்டுமின்றி, புதிய பட வாய்ப்புகளுக்காக கோலிவுட் மெகா நடிகர்களின் நள்ளிரவு பார்ட்டிகளுக்கு, 'விசிட்' அடித்து வந்த அவர், இப்போது அவர்களின் அழைப்புகளை நிராகரித்துவிட்டு, டோலிவுட் நடிகர்களிடம் முழுமையாக, 'சரண்டர்' ஆகி விட்டார்.****இசைஞானியின் வாழ்க்கை வரலாறு படத்தில், சுள்ளான் நடிகர் நடிப்பதாக, பூஜை போடப்பட்டது. ஆனால், அந்த படத்தை, 'மெகா பட்ஜெட்'டில் தயாரிக்க, சுள்ளான் நடிகர் வலியுறுத்தியதால், இவ்வளவு பெரிய தொகையை இந்த படத்திற்காக செலவு செய்தால், போட்ட பணத்தை கூட எடுக்க முடியாது எனச் சொல்லி, இரண்டு நிறுவனங்களில் ஒரு நிறுவனம், தயாரிப்பில் இருந்து பின் வாங்கி விட்டது.இதையடுத்து, கடந்த, ஆறு மாதங்களாக அந்த படத்தை கிடப்பில் போட்டவர்கள், இப்போது இன்னொரு புதிய நிறுவனத்துடன், 'டீல்' போட்டு, அப்படத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.சினி துளிகள்!* தற்போது பிரபாஸுடன் நடித்து வரும், தி ராஜா சாப் படம், தனக்கு திரையுலகில் ஒரு திருப்புமுனை படமாக அமையும் என்கிறார், பிரியங்கா மோகன்.* இட்லி கடை படத்தை அடுத்து, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடிப்பதற்கு கதை கேட்டுள்ளார், தனுஷ்.* தற்போது விஜய் நடித்து வரும், ஜனநாயகன் படத்தின், 70 சதவிகிதம் படப்பிடிப்பு முடிந்த நிலையில், அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.* தெலுங்கில் வெங்கடேசுடன் நடித்த, சங்கராந்திக்கு வஸ்துனாம் என்ற படம், ஹிட் அடித்த கையோடு, கன்னடத்திலும், உத்திரகாண்டா என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்து விட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ்.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !