உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

கதாநாயகனாகிறார், லோகேஷ் கனகராஜ்!வி ஜய், கமல், ரஜினி என, முன்னணி, 'ஹீரோ'களை வைத்து படங்கள் இயக்கிய, லோகேஷ் கனகராஜை, சிவகார்த்திகேயன் நடித்து வரும், பராசக்தி படத்தில் வில்லனாக நடிக்க அழைத்தபோது, 'நெகட்டிவ் ரோல்' என்றதும் மறுப்பு தெரிவித்தார்.தற்போது, அருண் மாதேஸ்வரன் இயக்கும் படத்தில், 'ஹீரோ' ஆக நடிப்பதற்கு தயாராகி வருகிறார். இந்த படம், 'ஆக்ஷன்' கதையில் உருவாகிறது. தான் நடிக்கும் முதல் படம் வெற்றியை கொடுத்தால், அதன் பின், நடிப்பு, இயக்கம் என, இரண்டிலும் கவனம் செலுத்த போவதாக கூறுகிறார், லோகேஷ் கனகராஜ்.— சினிமா பொன்னையாஉயிர் தோழிகளான சமந்தா,- கீர்த்தி சுரேஷ்!கு ஷி படத்திற்கு பின், பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும், சமந்தாவை அடிக்கடி ஹைதராபாத் சென்று சந்திக்கிறார், நடிகை கீர்த்தி சுரேஷ். திருமணத்திற்கு பின் நடிக்க, கீர்த்தி சுரேஷ் கதை கேட்டிருந்த சில படங்கள், வேறு நடிகையர் பக்கம் தாவி விட்டது.புதிய பட வாய்ப்புகளை கைப்பற்றும் முயற்சியாக ஹைதராபாத் செல்லும், கீர்த்தி சுரேஷ், சமந்தா வீட்டில் முகாமிட்டபடி படவேட்டை நடத்துகிறார். அந்த அளவுக்கு சென்னைவாசிகளான இவர்கள் இருவரும், ஹைதராபாத்தில் உயிர் தோழிகளாக வலம் வருகின்றனர். — எலீசாகுண்டு தான் அழகு என்கிறார், நித்யா மேனன்!த னுஷுடன், திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து, தேசிய விருது பெற்ற நடிகை, நித்யா மேனன், மீண்டும் அவருடன், இட்லி கடை படத்தில், நடித்துள்ளார். அதையடுத்து, புதிய படமொன்றில் நடிப்பதற்காக அவரது உடல் எடையை குறைக்க இயக்குனர் கேட்டுக் கொண்ட போது, அதற்கு மறுத்துவிட்டார், நித்யாமேனன்.'நான் குண்டாக இருந்தால் தான் அழகாக இருப்பேன். எடையை குறைத்தால், என் அழகும் குறைந்து போகும். அதோடு, என் தோற்றத்தை சிலர் விமர்சித்தாலும், பெருவாரியான ரசிகர்கள் இந்த அழகை தான் வர்ணிக்கின்றனர்...' என, 'ஸ்லிம்' ஆவதற்கு மறுத்துள்ளார்.— எலீசாவடிவேலுவின் கோரிக்கை!மறைந்த நடிகர் முரளியுடன் இணைந்து, வடிவேலு நடித்த, சுந்தரா டிராவல்ஸ் படத்தை சமீபத்தில், மறு வெளியீடு செய்தபோது, ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர்.இதனால், மீண்டும் தன் காமெடி காட்சிகளால், 'சூப்பர் ஹிட்' அடித்த படங்களை தயாரித்த நிறுவனங்களை தொடர்பு கொண்டு, அந்த படங்களை, மறு வெளியீடு செய்து, ரசிகர்கள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வாய்ப்பை உருவாக்குமாறு கேட்டு வருகிறார், வடிவேலு.— சினிமா பொன்னையாகருப்பு பூனைதன் வாரிசை முன்னணி இடத்துக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்பதற்காக, திரை மறைவில் தயாரிப்பாளர்களுக்கு, 'பைனான்ஸ்' உதவி எல்லாம் செய்து வருகிறார், சீயான் நடிகர். ஆனால், இந்த நேரத்தில் தன் மகன், மூன்றெழுத்து படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த அந்த கேரளத்து அம்மணியுடன் ஒட்டி உறவாடி வருவதாக, ஒரு செய்தி காதுகளை எட்டியதை அடுத்து, செம காண்டாகிவிட்டார், சீயான். இதனால், மேற்படி நடிகையுடன் எந்த ஒரு உறவையும் வைத்துக் கொள்ளக் கூடாது என, மகனுக்கு தடை உத்தரவு போட்டுள்ளார், சீயான் நடிகர்; மகனை கண்காணிப்பதற்காக ஒரு நபரை, அவரது உதவியாளராகவும் நியமித்துள்ளார்.சினி துளிகள்!* தன் நட்பு வட்டார இயக்குனர்களுடன், சில சமயங்களில் முட்டல் மோதல் ஏற்பட்டாலும், அதை நீடிக்க விடாமல், அடுத்த சில மாதங்களிலேயே மீண்டும் அவர்களிடம் சமாதானமாகி விடுகிறார், விஜய் சேதுபதி.* மாரி செல்வராஜ் இயக்கி உள்ள, பைசன் படத்தில் நடித்திருக்கும், துருவ் விக்ரம் அடுத்தபடியாக, மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்க போகிறார்.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Thravisham
செப் 01, 2025 11:04

பெல் டயமண்ட் அத்து போன வாரிசுகளைத்தான் நடிக்க வைப்பாரா ஏன் புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டாரா? வாரிசுகளுக்கு வாய்ப்பு கொடுக்குறேன் பேர்வழி என்று பல வாரிசு நடிகர்களுக்கு மூடு விழா நடத்தியதுதான் மிச்சம்