உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

இயக்குனர்களை சீண்டும், ராதிகா ஆப்தே!கபாலி படத்தில், ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஹிந்தி நடிகை, ராதிகா ஆப்தே, தென் மாநிலத்தைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறார். காரணம், 'இவர்களுக்கு நடிப்புத் திறமையை விட, நடிகையர் வெள்ளையாக இருக்க வேண்டும். அதனால் தான், என்னை போன்ற நிறம் குறைவான நடிகையரை ஓரம்கட்டி, கலர்புல்லான நடிகையரை இறக்குமதி செய்கின்றனர். என்னை கேட்டால், தென் மாநில பெண்கள் தான் அழகானவர்கள், திறமையானவர்கள். அதனால், நடிகையரின் நிறத்தைப் பார்க்காமல், திறமை எங்குள்ளதோ அதற்கு முதலிடம் கொடுக்க வேண்டும்...' என்று தன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். —  எலீசாசந்தானத்துக்கு ரஜினி கொடுத்த, 'அட்வைஸ்!'ரஜினி நடித்து, 1990-ல் வெளியான, அதிசய பிறவி படத்தின், தலைப்பில் ஒரு படத்தில் நடிக்கிறார், சந்தானம். இந்த, தலைப்பில் நடிப்பதற்காக அனுமதி கேட்க, அவர், ரஜினியை நேரில் சந்தித்தபோது, எப்படிப்பட்ட கதைகளைத் தேர்வு செய்ய வேண்டும். எந்த மாதிரியான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று சில அறிவுரைகளை கொடுத்துள்ளார், ரஜினி. குறிப்பாக, ஒரு படம் திரைக்கு வருவதற்கு முன் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டும், எப்படிப்பட்ட கதைகளில், எந்த 'கெட்-அப்'களில் நடிக்க வேண்டும் என்றெல்லாம், தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார், ரஜினி. அதன் காரணமாகவே, இதுவரை, காமமெடி மற்றும் திகில் படங்களில் நடித்து வந்த, சந்தானம், தற்போது, இந்த, அதிசய பிறவி படத்தில், 'ஆக்ஷன்' மட்டுமின்றி, ஏற்கனவே, மாநாடு படத்தில், சிம்பு நடித்தது போன்ற, வித்தியாசமான வேடங்களில் நடிக்கப் போவதாக கூறுகிறார். —  சினிமா பொன்னையாஅஜித் எடுத்த முடிவு!ஆரம்ப காலத்தில் தன் படங்களின் பூஜை மற்றும் அப்படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார், அஜித். ஆனால், தனக்கென ஒரு, 'மார்க்கெட்' உருவான பின், எந்தப் படங்களின் நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்பதில்லை. இந்நிலையில், தான் தயாரித்து நடிக்கும், டேர் டெவில் தமிழ் படத்தின் பூஜையில், அவரை கலந்து கொள்ளுமாறு பலரும் கோரிக்கை வைத்தனர்.அதற்கு, அஜித்குமாரோ, 'சமீபகாலமாக நான் நடித்த எந்த ஒரு படத்தின் பூஜை மற்றும் அப்படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டதே இல்லை. அப்படி இருக்கையில், நான் தயாரித்து நடிக்கும் படத்தின் பூஜையில் மட்டும் கலந்துகொண்டால், மற்ற தயாரிப்பாளர்கள் என்னை கடுமையாக விமர்சிப்பர். அதனால், எப்போதும் போல இந்தப் படத்தின் பூஜை மற்றும் விளம்பர நிகழ்ச்சிகளிலும் நான் பங்கேற்க மாட்டேன்...' என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.—  சினிமா பொன்னையாகருப்புப் பூனை!திருமணத்திற்குப் பிறகும் சினிமாவில் அதிரடி ஆட்டம் காட்டி வருகிறார், தேசிய விருது பெற்ற, புகழ் என்ற அர்த்தம் தரும் நடிகை. குறிப்பாக, படங்களில் குத்தாட்டம் போடும் அம்மணி, திரைக்குப் பின்னால், பிரபல நடிகர்களுடன் உச்சக்கட்ட ஆட்டம் போட்டு வருகிறார்.இந்தச் செய்தி, காத்து வழியாக, அம்மணியின் ஆத்துக்காரரின் காதை அடைய, வீட்டில் கலவரம் ஏற்படத் துவங்கிவிட்டது. இதனால், சினிமாவைத் தொடர்வதா, அல்லது கணவரை கழட்டி விடுவதா என்கிற சிக்கலில் சிக்கியிருக்கிறார், நடிகை.******சமீபத்தில் வெளியான, பெண் கடவுள் பெயர் கொண்ட படத்தில் வில்லியாக நடித்திருந்த, நடிகை. கதாநாயகியாக வாய்ப்பு கிடைக்காததால் தான், வில்லி வேடத்துக்கு மாறியதாக கூறுகிறார், இனிமேல் தனக்கு, 'ஹீரோ'களை விட, இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் நட்பு தான் முக்கியம் என்று கூறி, தன், 'ரூட்'டை மாற்றிவிட்டார். குறிப்பாக, சில நரைமுடி தயாரிப்பாளர்களுக்கு சோமபான விருந்தளிப்பதின் மூலம், தனக்கான பட வாய்ப்பை அதிகரிப்பதோடு, படத்தில் தன் பங்களிப்பையும் அதிகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.அம்மணியின் இந்த அரவணைப்பில் கிறங்கிப்போன சில நரைமுடி தயாரிப்பாளர்கள், இப்படி தங்களை தேடி வந்து உபசரிப்பு நடத்தும் அவரை, தாங்கள் தயாரிக்கும் படங்கள் மூலம், அதிரடி வில்லியாக வளர்த்துவிட வரிந்து கட்டி களமிறங்கியுள்ளனர்.சினி துளிகள்!* பூ மற்றும் பிச்சைக்காரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய, இயக்குனர் சசி, தற்போது, ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்கும், 100 கோடி வானவில் என்ற படத்தை, இயக்கியுள்ளார்.* மூக்குத்தி அம்மன்- 2 படத்தைத் தொடர்ந்து, இரண்டு ஹிந்திப் படங்களில் நடிக்கிறார், ரெஜினா.* பிரபுதேவா, சிம்ரன் இருவரும் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு, கமல் ஸ்ரீதேவி என்று தலைப்பு வைத்துள்ளனர்.* ஏற்கனவே, பேபி ஜான் என்ற ஹிந்தி படத்தில் படுகவர்ச்சியாக நடித்திருந்த, கீர்த்தி சுரேஷ், தற்போது ஹிந்தியில் நடிக்கும், ரப்தார் என்ற படத்தில், காமெடி கலந்த வேடத்தில் நடிப்பதாக கூறுகிறார்.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !