கவிதைச்சோலை: தலைமுறைகள் போற்றும் தவப்புதல்வர்!
அக்., 15 - அப்துல் கலாம் பிறந்தநாள்கனவு காணுங்கள் என்றவர் கல்வி மீது நம்பிக்கை விதைத்தவர் மனதில் உறுதியை மலர்த்தியவர் மாணவர்களின் வழிகாட்டியானவர்! நாட்டின் பெருமையை உயர்த்தியவர் எளிமை வாழ்வால் சிறந்தவர் விஞ்ஞானத்தால் உலகை வென்றவர் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர்! வறுமை வாழ்வில் பிறந்து வளர்ந்தவர் வைரமாய் மிளிர்ந்த அறிவியலாளர் உழைப்பை எந்நாளும் மதித்த உத்தமர் சத்தியத்தை உயிராய் காத்தவர்! மக்கள் மகிழும் ஜனாதிபதியானவர் மாணவர் மனதில் தெளிவு தந்தவர் காந்தியின் கனவை நனவாக்கியவர் கற்பித்தலில் ஆர்வம் கொண்டவர்! கருத்துகள் பகிர கவிதை வடித்தவர் குறளின் பொருளை எடுத்துரைத்தவர் அறத்தின் பக்கம் நின்று காட்டியவர் அனைவரும் போற்றும் புனிதரானவர்! வீணை இசையில் மெழுகாய் உருகியவர் விடாமுயற்சியில் வாழ்வை செதுக்கியவர் சோம்பல் அண்டாத சுறுசுறுப்பானவர் அன்பு புன்னகைக்கு அடையாளமானவர்! நாடு வளர்ந்திட உற்சாகம் ஊட்டியவர் தேசப்பற்றை நெஞ்சில் சுமந்தவர் தன்னலம் கருதாது உதவிகள் செய்தவர் அழியாத புகழை அடைந்த மாமனிதர்! காலத்தை வென்று நிலைத்து நிற்பவர் நற்சிந்தனையால் மனதில் ஒளிர்பவர் தமிழனின் மாண்பை உயர்த்தியவர் தலைமுறைகள் போற்றும் தவப்புதல்வர்! — டி.எல். குமார், விழுப்புரம்.