உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை: துணிந்து நில்.. தொடர்ந்து செல்!

வளர்ச்சி வேண்டுமெனில் துணிச்சல் வேண்டும் துணிச்சல் தான் உயர்வுக்கான ஒரே தாரக மந்திரம்! லட்சிய சிகரத்தில் வெற்றிக்கொடி நாட்டுபவர் மட்டுமே வரலாற்று ஏடுகளில் பதிவு செய்யப்படுகிறார்! பிறப்பையும், இறப்பையும் பதிவு செய்யும் நாம் வாழ்வை பதிவு செய்ய வேண்டாமா? அதற்கு ஓர் லட்சியம் வேண்டும் அந்த லட்சியத்தை அடைய துணிவு வேண்டும்! உங்கள் மீது உங்களுக்கே நம்பிக்கை பிறக்க வேண்டும் அதுதான் தன்னம்பிக்கை! உளி படாத கல் சிலையாவதில்லை துணிவில்லா கனவும் நனவாவதில்லை! துணிவே உயர்வுக்கான ஒரே உந்து சக்தி! உங்களை நீங்கள் எந்த அளவு நம்புகிறீர்களோ அதனைப் பொறுத்தே உங்கள் செயல்பாடு இருக்கும்! தோல்வியைக் கண்டு துவளாதே! உங்கள் செயல்பாடே உங்கள் வெற்றியைத் தீர்மானிக்கிறது! * உங்களை நீங்களே நம்பும்போது தான் ஒளிமயமான எதிர்காலத்தை உங்களால் அமைக்க முடியும்! *நம்புங்கள் உங்களால்சாதிக்க முடியும்! கவலைப்படாதே நடந்தது நடந்ததாக இருக்கட்டும் நடப்பவை நல்லதாக இருக்கட்டும்! கவலைப்படுவதால் ஒரு பயனும் இல்லை! கவலையை துாக்கி எறி! வாய்ப்புகளை பயன்படுத்து! வாய்ப்பை பயன்படுத்த திறமையை வளர்த்துக்கொள்! மூளையைக் கசக்கு தெளிவு பிறக்கும்! துணிவுடன் செயல்பட்டு உன் கனவை நனவாக்கிக் கொள்! - தங்க.சங்கரபாண்டியன், பொழிச்சலுார், சென்னை.தொடர்புக்கு : 9283232370


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !