உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை: எங்கள் தாய்மொழி தமிழ்!

* கற்க கற்க கற்கண்டு போல் இனிக்கும் கல்லாதார் வயிற்றை கனல்மூட்டி எரிக்கும் அமுதம் மட்டுமல்ல தமிழ் அமிலமும் ஆகும் எங்கள் தமிழ்! * படிக்க படிக்கப் பாகுபோல் சுவைக்கும் படிக்காதார் வாய்க்குப் பாகற்காய் போல் இருக்கும்! * வாசிக்க வாசிக்க வாய் ஊறும் வாசிக்கப் பழகிவிட்டால் நாக்கு தித்திக்கும் தமிழமுதம் பருகப் பருகப் பஞ்சாமிர்தம் போலாகும்! * உள்ளங்கையில் நெல்லிக்கனி உள்ளதுபோல் கன்னித்தமிழ் கற்பது கடினமில்லை கற்றுத் தெரிந்துவிட்டால் விட்டு விலக வழியில்லை! * கேட்டால் காதில் தேன்பாயும் கேட்காதார் காதில் சீழ்வடியும் மாங்கனி பலா வாழை என மூன்று கனியும் சேர்ந்த முத்தமிழ் எங்கள் தமிழ்மொழியாகும்! * ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் ஆடல் பாடல் இயல் இசை நாடகம் நாட்டியம் நடனம் அறுபத்து நான்கு கலையும் தமிழ்! * சிந்திக்க வைத்திடும் செந்தமிழ் பழகப்பழகப் பிடித்திடும் பைந்தமிழ் சங்கம் வளர்த்த செம்மொழி தமிழ்! * தீந்தமிழ் தேன்மொழித் தமிழ் அருந்தமிழாம் அன்னைத் தமிழாம் எங்கள் உலகத் தாய்மொழி தமிழே! - கே.ஜே.செல்வராஜ், கோத்தகிரி. மொபைல்: 80988 50514


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !