கவிதைச்சோலை: புத்தாண்டே வருக... புதுவாழ்வு தருக!
ஏப்.,14 - தமிழ் புத்தாண்டு மானுடம் தழைக்க மங்களம் நிலைக்க தேனினும் இனிமை தேசத்தில் நிரம்ப புத்தாண்டே வருக புதுவாழ்வு தருக! எத்திசை நோக்க இன்பமே பூக்க பக்தியில் தேசம் பாவத்தை போக்க முத்திரை பதிக்கும் சித்திரை வருக! பொய்யும் புரட்டும் பூமியில் கருக வையம் ஓங்கி வாழ்வும் பெருக சித்திரை மகளே சிறப்புடன் வருக! போதைகள் இல்லா பாதைகள் தெரிய வேதனை நீங்கி கோதையர் திரிய சாதனை ஆண்டாய் சித்திரை மலர்க! தோல்விகள் தொலைய வெற்றிகள் குவிய வன்முறை அழிந்து வாழ்முறை தழைக்க வண்டமிழ் ஆண்டே வளம்தர வருக! மாற்றங்கள் பிறக்க மகிழ்ச்சியோ நிலைக்க ஏற்றங்கள் சிறக்க ஏழ்மையோ பறக்க நற்றமிழ் ஆண்டே நலமுடன் வருக! - எஸ்.கவியரசன், கடம்பத்துார். தொடர்புக்கு: 98949 18250