உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை: வாழ்வின் ஒளிப்பாதை!

காலை சூரியன் உதிக்கும் போது புதிய நம்பிக்கை பிறக்கிறது நேற்றைய கவலை மறந்து இன்று வாழ மனம் விழைகிறது! காற்றின் இசை கேட்கும் நேரம் உள்ளம் அமைதியாகிறது சின்ன சந்தோஷம் கூட பெரிய மகிழ்ச்சி தருகிறது! வீழ்ந்தால் எழுவது வாழ்க்கை அதுதான் அதன் அழகு தோல்வி சொல்லும் பாடங்கள்வெற்றிக்கு வழிகாட்டும்! நண்பர்கள் அருகில் இருந்தால் துன்பம் துாரம் போகும்ஒரு சிரிப்பு போதும்நாளே அழகாகும்! கனவுகள் பேசும் இரவில் நம்பிக்கை துாங்காது முயற்சி தொடர்ந்து சென்றால்எதுவும் முடியாதது இல்லை! மழை வரும் நேரத்தில்மனசு புதிதாய் மலரும்ஒவ்வொரு துளியிலும்வாழ்க்கை இனிமை தெரியும்! காலம் கற்றுக்கொடுக்கும்அமைதி பெரிய பலம்அதை உணர்ந்தவனுக்குவாழ்க்கை ஒரு வரம்! அன்பு விதைத்த இடத்தில்மகிழ்ச்சி மலர்கிறதுநல்ல எண்ணம் இருந்தால்நாளை நிச்சயம் சிரிக்கும்! பாதை எளிதாக இல்லையென்றாலும்பயணம் நிற்காது நம்பிக்கை இருந்தால் வெற்றி வெகுதுாரத்தில் இல்லை! உன் உள்ளம் சொல்வதை கேள்அதில் தான் உன் வழிஉன் நம்பிக்கை தோழனாக இருந்தால்உலகமே உன் வசம்! - அ.தீ.வினிஷா, நாகர்கோவில்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !