உள்ளூர் செய்திகள்

நவராத்திரி டிப்ஸ்!

நவராத்திரி முடிந்தவுடன், பொம்மைகளை பெட்டியில் அடுக்கி, பரணில் எடுத்து வைக்கும் முன்பு, கொலுவை போட்டோ எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு பெட்டியின் மேல், 1, 2, 3, 4 என, எண்களை எழுதி விடவும். எந்தப் பொம்மையை எந்த படியில் வைக்க வேண்டும் என, அந்த பொம்மையைச் சுற்றி வைத்த பேப்பரில் எழுதி ஒட்டி விடவும். அடுத்த முறை கொலு வைக்கும் போது, எடுத்து அடுக்க சுலபமாக இருக்கும் * சரஸ்வதி பூஜையன்று கொலுவில் புத்தகங்களை வைத்து, அதன் மீது நெல்லித்தழை, மாங்கொழுந்து, மலர்கள், அட்சதை துாவி, துாப தீபம் காட்டி, பழம், பாயசம், நைவேத்யம் செய்து வழிபட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !