உள்ளூர் செய்திகள்

வேலியாக விஷச்செடி!

சத்தீஸ்கர் மாநிலத்தில் வாழும், 'பைகா' என்ற பழங்குடி மக்கள், 'நாங்கள் பூமிதேவியின் நேரடி வாரிசுகள். பயிர் செய்ய நிலத்தை உழுதால், பூமி தேவிக்கு வலிக்கும்...' என, விவசாயம் செய்வதை தவிர்த்து வந்தனர். இவர்களில் சிலர் கல்வி அறிவு பெற்று, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய விவசாயம் செய்ய முன் வந்தனர். அதையடுத்து, மூட நம்பிக்கையை விட்டு, தற்போது விவசாயம் செய்து வருகின்றனர்.இவர்கள் தங்கள் வயல்களை சுற்றிலும் வேலியாக, 'ரத்தன் ஜோட்டு' என்ற செடிகளை வளர்ப்பர். இதன் இலைகளை சாப்பிடும் மிருகங்கள் உடனடியாக செத்து விடுமாம். அவ்வளவு விஷத்தன்மை கொண்ட தாவரம் இது!— ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !