ரிலாக்ஸ் கார்னர்!
வீட்டில் அம்மாவும், பிள்ளையும் உட்கார்ந்து, வாசல் கதவை லேசாக திறந்த நிலையில் வைத்து விட்டு, 'டிவி' சீரியலை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தனர். மகனிடம், 'டேய், அப்பா வந்துட்டார் பார்...' என்றாள், அம்மா.எழுந்து போகாமலேயே, 'போம்மா யாரும் வரலை...' என்றான், மகன். 'டேய் போய் பாருடா...' என, அம்மா கூற, எழுந்து சென்று மகன் பார்க்க, அப்பாவும் உள்ளே வந்தார்.'அம்மா எப்படிம்மா, அப்பா வர்றார்ன்னு உனக்குத் தெரிஞ்சது. கரெக்டா சொன்ன...' என்றான், மகன்.'அதெல்லாம் எனக்கு தெரியும்டா...' என்றாள், அம்மா. 'சொல்லு. நானும் தான் உன் கூட, 'டிவி' பார்த்துக்கிட்டிருக்கேன். எனக்குத் தெரியலையே. அதுவும் தெருவுல நிறைய பேர் போவாங்க, வருவாங்க. அப்பாதான்னு நீ எப்படிம்மா கண்டுபிடிச்ச. சொல்லும்மா...' என்றான், மகன்.'அதுவாடா, இந்த தெருவிலேயே கேனையனாட்டம் செருப்ப தேச்சி தேச்சி இழுத்துக்கிட்டே நடக்கிற ஒரே ஆளு, உங்கப்பன் தான்டா...' என்றாள், அம்மா. - புலவர் மா.ராமலிங்கம்