உள்ளூர் செய்திகள்

புலிக்களி நடனம்!

கேரள மாநிலம், திருச்சூர் நகரில் ஓணம் பண்டிகையன்று புலியாட்டம் நடத்தப்படுகிறது. 'புலிக்களி' என அழைக்கப்படும் இந்த புலியாட்டத்தை காண ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடுவர். பல ஆண்டுகளுக்கு முன் திருச்சூரில் முகாமிட்டு இருந்த நம் ராணுவத்தினர் பொழுதுபோக்காக புலி வேடம் போட்டு நடனம் ஆடியதைத்தான் இன்று, புலியாட்டம் என்ற பெயரில் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். மிக பெரிய தொப்பை உள்ளவர்களை, 'சூப்பர் புலி' என்று அழைக்கின்றனர். பெரிய தொப்பையுடையவர் ஆடும் ஆட்டத்திற்கு, 20 ஆயிரம் ரூபாய் வரை சன்மானம் வழங்கப்படுகிறது. ஐந்து மணி நேரம் செலவழித்து, புலி வேடத்திற்கு ஒப்பனை மேற்கொள்கின்றனர். புலிக்களி நடனத்தின் மீது ஆர்வம் கொண்ட சில பெண்களும் புலி மற்றும் சிங்கம் வேடமிட்டு சாலைகளில் நடனமாடி அசத்துகின்றனர். - ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !