உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

* ரா. ராஜ்மோகன், திண்டிவனம்: 'எனக்கு, முதல்வர் ஆகும் ஆசையும், எண்ணமும் வரக்கூடாதா?' எனக் கேட்கிறாரே, நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார்?எண்ணம் வரட்டும்... அது, அவர் நடிக்கும் சினிமாவில் மட்டுமே முடியும்!எம். மணிப்ரியா, பெங்களூரு: சமவெளியாக உள்ள சென்னையை, வெள்ளத்திலிருந்து காப்பாற்ற, எந்த ஆளும், ஆண்ட திராவிட கட்சிகளுமே, இவ்வளவு ஆண்டுகளாக, அக்கறை கொள்ளவில்லையே...அக்கறை கொண்டிருந்தனர்... எதில் தெரியுமா? வெள்ளத்திற்காக ஒதுக்கப்படும், மாநில - மத்திய அரசுகளின் நிதிகளை, தங்கள் வீட்டிற்கு கொண்டு செல்வதில்!இ. பர்ஹானா, புதுடில்லி: மருத்துவமனையில் இருந்து, சமீபத்தில் தான் வீட்டுக்கு திரும்பியிருக்கிறார், விஜயகாந்த். அவரை, பொதுக்குழு கூட்டத்திற்கு அழைத்து வந்து, பொம்மை போல உட்கார வைத்து... 'டிவி'யில் பார்க்கவே பரிதாபமாக இருந்ததே... எதற்காக இந்த நாடகம்?விஜயகாந்தால், இனி, யாருடனும் சரி வர பேச இயலாத நிலை. எதிர் வரும் லோக்சபா தேர்தலில் கூட்டணி குறித்து பேச, ஆள் தேவை என்பதாலேயே, அவர் மனைவி பொதுச் செயலராக தேர்ந்தெடுப்பதை அறிவிப்பதற்காகவே, இந்த நாடகம்! டி. ஜெயசிங், கோவை: பார்லிமென்ட் பாதுகாப்பில் குறைபாடா?இருந்ததால் தானே, இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்து இருக்கிறது.ஜி. அர்ஜுனன், அவிநாசி: தே.மு.தி.க.,வுக்கு எதிர்காலம் இருக்கா?இவர்களுக்கு, 'லெட்டர் பேட்' அச்சடித்து கொடுக்கும் அச்சகங்களுக்கு மட்டுமே எதிர்காலம் இருக்கிறது!    * ப. சுந்தரம், கோவை: நான் வாழ்வில் நல்லவனாக இருக்க வேண்டும் என, நினைக்கிறேன்... இது சரியா?'வெரி குட்!' நாம் நல்லவர்களாக இருக்க வேண்டும்; அதை விட உத்தமர்களாக இருக்க வேண்டும்; எல்லாவற்றையும் விட வல்லவர்களாக விளங்க வேண்டும். நேர்மையை அறிந்தவர்கள் நல்லவர்கள்; நேர்மையை நேசிப்பவர்கள் உத்தமர்கள்; நேர்மையை கடைப்பிடிப்பவர்கள் தான் வல்லவர்கள்!     அ. துரை, மதுரை: என் நண்பன் முகம், எப்போதும் பிரகாசமாக இருக்கிறதே... அது எப்படி?அவர் முகம் எப்போதும் பிரகாசமாக இருக்கிறதென்றால், அவர், நாணயம் தவறாது, உழைக்கும் மனிதராக இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !