நடந்தது என்ன?
* மார்ச் 17, 1805ல், தலைவன் என்ற நிலையிலிருந்து, பிரான்ஸ் நாட்டின் அரசன் ஆனார், நெப்போலியன். * 1919ல், ரவ்லட் சட்டத்தை எதிர்த்து, பிரசாரம் செய்ய, சென்னை வந்தார், காந்திஜி. * 1941ல், வாஷிங்டன் தேசிய கலைக் காட்சியகம், அப்போதைய அமெரிக்க அதிபரான, பிராங்கிளின் ரூஸ்வெல்ட்டால் திறக்கப்பட்டது. * 1958ல், அமெரிக்கா, 'வங்கார்ட்' என்ற செயற்கை கோளை வானில் ஏவியது. * 1959ல், 14வது தலாய்லாமா இந்தியா வந்த நாள். * 1963ல், பாலித்தீவில், எரிமலை வெடித்து 1,100 பேர் மரணமடைந்தனர். * 1987ல், சுனில் கவாஸ்கர், டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக, 96 ரன்கள் குவித்தார்.