உள்ளூர் செய்திகள்

சுத்தமான காற்று வேண்டுமா?

உலகம் முழுவதும், பெரிய நகரங்களில் மனித உயிர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது காற்றில் ஏற்பட்டுள்ள மாசு!சீன தலைநகர் பீஜிங்கில் தான், காற்று மாசு மிக அதிகம். சமீபத்தில், அங்கு, பள்ளி, கல்லூரிகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் எல்லாம், காற்று மாசு காரணமாக, சில நாட்களுக்கு மூடப்பட்டன.இத்தகைய சூழலை பயன்படுத்தி, சுவிட்சர்லாந்து மலைப் பிரதேசங்களில் வீசும் சுத்தமான காற்றை, பாட்டில்களில் அடைத்து, விற்பனை செய்து, செமத்தியாக கல்லா கட்டி வருகிறது, கனடாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம். பெரும் பணக்காரர்கள், இந்த பாட்டில்களை போட்டி போட்டு வாங்குகின்றனர்.வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தாவிட்டால், விரைவில், இந்தியாவில் உள்ள சென்னை, டில்லி, மும்பை போன்ற நகரங்களிலும், சுத்தமான காற்றை, விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்படலாம்!— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !