உள்ளூர் செய்திகள்

ஞானி என்பவர் யார்?

எவர் அழைத்தும் போகாமல், விதுரனின் வீட்டுக்கு சென்றார், ஸ்ரீகிருஷ்ணர்.'நம் வீட்டுக்காவது, கிருஷ்ண பரமாத்மா வருவதாவது...' என நினைத்திருந்த, விதுரன், அவரின் வருகையை கண்டு நிலை தடுமாறினான்; இங்குமங்குமாக அலைந்து, என்ன செய்வதென்று பரபரத்து, ஏதேனும் சாப்பிட கொடுக்க வேண்டுமென்று நினைத்தபடியே அடுப்படிக்கு ஓடினான்.வாழை பழங்கள் தென்பட்டன. அப்படியே அள்ளியெடுத்து வந்து, 'கிருஷ்ணா... இப்போது, என்னிடம் இருப்பது இவை மட்டுமே... மறுக்காமல் சாப்பிட்டு, உன் பசியை ஆற்றிக் கொள்...' என்று கெஞ்சினான்.'உன் அன்பே, என் பசியை ஆற்றி விட்டது, விதுரா...' என்றார், கிருஷ்ணர்.அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அதே நேரம், 'ச்சே... வீட்டுக்கு வந்த கிருஷ்ணனை, இப்படியா நிற்க வைத்து உபசரிப்பது...' என்று, தன்னை தானே நொந்து கொண்டவன், ஓடிப்போய் ஒரு ஆசனத்தை எடுத்து வந்து, அமரச் சொன்னான். முன்னதாக, அந்த ஆசனத்தை தடவி தடவி பார்த்துக் கொண்டே இருந்தான், விதுரன்.'துரியோதனனின் சாப்பாட்டில் வளர்ந்த நாம், அவனை போலவே சிந்தனை கொண்டு, சுயநினைவின்றி, பகவான் கிருஷ்ணரை அவமானப்படுத்தும் வகையில் ஏதேனும் பள்ளம் தோண்டி வைத்திருக்கிறோமோ... அந்த ஆசனத்தில் ஊசியை செருகி வைத்து, இம்சிக்க செய்திருக்கிறோமோ... துரியோதனின் சாப்பாட்டை சாப்பிட்ட எனக்கு, அவன் புத்தியானது நம்மையும் அறியாமல் வந்திருக்குமோ...' என பதைபதைத்தான், விதுரன்.'விதுரா... கவலை எதற்கு, என் பசியை ஆற்றி விட்டாய், நீ. நான் வந்ததும், என்ன செய்வது, என்ன தருவது என்று தெரியாமல் கலங்கி தவித்தாயே... அந்த உன் கலக்கமே, என் பசியை போக்கி விட்டது. அதனால் தான், நீ பழம் தந்தும், வேண்டாம் பசியாறி விட்டதாக சொன்னேன்...' என்றார், கிருஷ்ணர்.எவ்வளவு பெரிய ஞானி, விதுரன். ஆனால், அந்த ஞானியின் கலக்கத்தை கண்டு ரசித்தார், கிருஷ்ணர்.'எவனொருவன், ஒரு விஷயத்தை கண்டு கலங்கி தவிக்கிறானோ, அவனே ஞானி. அப்படி ஞானியாக திகழ்பவரையே மதிக்கிறார்; அருள்கிறார்; அரவணைக்கிறார்; ஆட்கொள்கிறார் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா...' என, அற்புதமாக விளக்குகிறார், வேதவியாசர்.உலக விஷயங்களில், தெளிவாக இருங்கள்; பகவத் காரியத்தில் கொஞ்சம் கலங்கி, குழம்பியே இருங்கள். குழப்பங்களுக்கு விடை கிடைக்கும்; கடவுளின் பேரருளும் கிடைக்கும். ஆ. சி. கோவிந்தராஜன்ஆன்மிக தகவல்கள்!நீண்ட காலமாக பூஜித்த சாளகிராமம், பாணலிங்கங்களை பூஜிக்க முடியவில்லை என, பிறருக்கு கொடுக்கக் கூடாது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !