மீண்டு வருவாரா அம்பிளி சேட்டன்!
மலையாள சினிமா உலகில், 'அம்பிளி சேட்டன்' என அன்பாக அழைக்கப்பட்ட, நடிகர் ஜெகதி ஸ்ரீகுமார், இரண்டு ஆண்டுக்கு முன் நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி, நிலைகுலைந்தார். இதனால், வலது கையும், காலும் செயல் இழந்தன. மூளையில் பலமாக அடிபட்டதால், எவ்வித உணர்வும் இல்லாமல் வாழ்ந்து வந்தார். ஆனால், சிறந்த சிகிச்சையால், சற்று முன்னேற்றம் தெரிகிறது. இப்போது, நகைச்சுவை காட்சிகளை, 'டிவி'யில் பார்த்தால் சிரிக்கிறார். இது, முன்னேற்றத்தின் அறிகுறி எனவும், விரைவில் கை, கால்கள் இயங்குமளவிற்கு மாறி விடுவார் என்கின்றனர், டாக்டர்கள். இவர், நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் கொடிக் கட்டி பறந்த போது தான், கார் விபத்தில் சிக்கினார்.—ஜோல்னாபையன்.