உள்ளூர் செய்திகள்

பெண் பூசாரிகள்!

ஒரு காலத்தில், கணவனை இழந்த பெண்களை பார்ப்பதோ, அவர்களை வீட்டு விசேஷங்களுக்கு அழைக்கவோ மாட்டார்கள். இன்றும் கூட, ஒரு சிலர், இரக்கமின்றி இப்பெண்களை நல்ல காரியங்களில் இருந்து ஒதுக்கித் தான் வைக்கின்றனர். ஆனால், கர்நாடகாவில் உள்ள, குத்ரோலரி கோகர்ணநாத கோவிலில், கணவனை இழந்த பெண்கள் பூசாரிகளாக பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.இக்கோவிலில், இரு ஆண்டுகளுக்கு முன், கணவனை இழந்த ஐந்து பெண்களை பூசாரிகளாக நியமித்தனர். ஆனால், இன்று, இரு பெண்கள் தான் இருக்கின்றனர். 'சம்பளம் குறைவு தான் என்றாலும், அனைவராலும் ஒதுக்கப்பட்ட எங்களுக்கு, வாழ்க்கை மீது நம்பிக்கை ஏற்பட இந்த வேலை தான் காரணமாக இருக்கிறது...' என்கின்றனர், பூசாரிகளான லட்சுமியும், இந்திராவும்!— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !