உள்ளூர் செய்திகள்

ரோபோக்களுக்கு உலக கோப்பை போட்டி!

இயந்திர மனிதர்கள் என கருதப்படும் ரோபோக்களுக்கான முதல் உலக கோப்பை போட்டி, வரும் அக்டோபர் மாதம் நியூசிலாந்து நாட்டில் நடக்கிறது. இந்த நாட்டில் ஆக்லாந்து நகரில், ரக்பி உலக கோப்பை விளையாட்டுப் போட்டி நடக்கிறது. அந்த போட்டியின் போது, ரோபோக்களுக்கான உலக கோப்பை போட்டியும் நடக்கிறது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா, மெக்சிகோ, கொலம்பியா நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளன. அக்டோபர் மாதம், 11 முதல், 13ம் தேதி வரை போட்டிகள் நடக்கும். ரோபோக்களின் டிசைன், அதன் திறமை, வேகம் போன்றவை இந்த போட்டியின் போது சோதித்து பார்க்கப்படும்.— ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !