கூட்டுறவு வங்கிகளில் 2513 உதவியாளர் பணி
கூட்டுறவு வங்கிகளில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. உதவியாளர், கிளர்க் பிரிவில் சென்னை 194, மதுரை 100, கோவை 90, திருப்பூர் 104, காஞ்சிபுரம் 49, செங்கல்பட்டு 126, திண்டுக்கல் 98, தேனி 30, சிவகங்கை 67, ராமநாதபுரம் 33, விருதுநகர் 36, நெல்லை 44, விழுப்புரம் 44, கடலுார் 47 உட்பட மொத்தம் 2513 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு, கூட்டுறவு பயிற்சி (D.Cop.,) வயது: பொது பிரிவு 18 - 32. இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது உச்சவரம்பு இல்லை. தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு. தேர்வு நாள்: 11.10.2025 விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன். விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசி நாள்: 29.8.2025 விபரங்களுக்கு: drbchn.in