கனரா வங்கியில் 3500 அப்ரென்டிஸ் காலியிடங்கள்
பொதுத்துறையை சேர்ந்த கனரா வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 'அப்ரென்டிஸ்' பிரிவில் கர்நாடகா 581, உ.பி., 409, தமிழகம் 391, ஆந்திரா 247, கேரளா 240, மஹாராஷ்டிரா 205 உட்பட மொத்தம் 3500 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு (1.1.2023 முதல் 1.9.2026க்குள் தேர்ச்சி) வயது: 20-28 (1.9.2026ன் படி) தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு ஸ்டைபண்டு: மாதம் ரூ. 16,650 விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500 எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை கடைசிநாள்: 17.10.2026 விவரங்களுக்கு: canarabank.bank.in