வங்கியில் மேனேஜர் பணி
பொதுத்துறையை சேர்ந்த பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. செக்யூரிட்டி மேனேஜர் பதவியில் மொத்தம் 27 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு வயது: 25-35 (1.4.2026ன் படி) அனுபவம்: ராணுவத்தில் 'கமிஷன்ட் ஆபிசர்' 5 ஆண்டு பணி. தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு தேர்வு மையம்: சென்னை, மதுரை கோவை, உட்பட 10 இடங்கள். விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 850. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100 கடைசிநாள்: 5.5.2026 விவரங்களுக்கு: punjabandsind.bank.in