தொழில் வளர்ச்சி வங்கியில் மேனேஜர் பணி
சிறு தொழில் வளர்ச்சி வங்கியில் (சிட்பி) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அசிஸ்டென்ட் மேனேஜர் 50, மேனேஜர் பிரிவில் பொது 10, சட்டம் 6, ஐ.டி., 6 என மொத்தம் 72 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.காம்., / பி.ஏ., பொருளாதாரம் / பி.எஸ்சி., கணிதம், புள்ளியியல். வயது: அசிஸ்டென்ட் மேனேஜர் 21 - 30, மற்ற பணி 25 - 33 (8.11.2024ன் படி)தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு.தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம்.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1100எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 175.கடைசிநாள்: 2.12.2024விவரங்களுக்கு: sidbi.in