பார்மசி முடித்தவருக்கு பாதுகாப்பு படையில் பணி
மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (சி.ஐ.எஸ்.எப்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பார்மசிஸ்ட் 18, லேப் டெக்னீசியன் 5, எக்ஸ்ரே டெக்னீசியன் 1 என மொத்தம் 24 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: டி.எம்.எல்.டி., / டி.பார்ம்.,/பி.பார்ம்.,/ரேடியோகிராபி வயது: 18-28 (7.7.2026ன் படி) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ சோதனை. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 7.7.2026 விவரங்களுக்கு: cisfrectt.cisf.gov.in