அழைக்கிறது நீர்வழி ஆணையம்
மத்திய அரசின் இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையத்தில் (IWAI) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிளர்க் 4, ஜூனியர் ஹைட்ரோ கிராபிக் சர்வேயர் 9, சீனியர் அக்கவுன்ட்ஸ் ஆபிசர் 1 என மொத்தம் 14 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பிளஸ் 2 / பி.இ., (சிவில்)/ சி.ஏ., வயது: 18 - 27, 18 - 35 (5.11.2025ன் படி) தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 5.11.2025 விவரங்களுக்கு: iwai.nic.in