உள்ளூர் செய்திகள்

விளையாட்டு வீரர்களுக்கு மத்திய அரசு வேலை

வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீடு காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிடம்: வருமானவரி இன்ஸ்பெக்டர் 2, வரி உதவியாளர் 25, ஸ்டெனோகிராபர் 2, எம்.டி.எஸ்., 26 என மொத்தம் 55 இடங்கள் (தடகளம் 17, கிரிக்கெட் 6, வாலிபால், கூடைப்பந்து, கபடி, பாட்மின்டன் தலா 4, டேபிள் டென்னிஸ், துப்பாக்கிசுடுதல் தலா 3, குத்துச்சண்டை, மல்யுத்தம், ஈட்டி எறிதல், பாரா, லான் டென்னிஸ் தலா 2) உள்ளன.கல்வித்தகுதி: ஸ்டெனோ, எம்.டி.எஸ்., பணிக்கு பிளஸ் 2, மற்ற பணிக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும்.வயது: 16.1.2024 அடிப்படையில் வருமான வரி இன்ஸ்பெக்டர் 18 - 30, எம்.டி.எஸ்., 18 - 25, மற்ற பணிக்கு 18 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.தகுதி: சர்வதேச / தேசிய / பல்கலை போட்டிகளில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.தேர்ச்சி முறை: ஸ்கில்தேர்வு, ஸ்டெனோ தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்கடைசிநாள்: 16.1.2024விபரங்களுக்கு: incometaxrajasthan.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !